சோழவரம் ஏரி
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு நீர்த்தேக்கம் From Wikipedia, the free encyclopedia
சோழவரம் ஏரி (English: Sholavaram aeri) என்பது தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மழைநீர்ப் பிடித் தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கத்திலிருந்து அண்மையிலுள்ள சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த ஏரி சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியின் கொள்ளளவு 1.08 டி.எம்.சி. ஆகும்.[1] அதாவது, 1,081 மில்லியன் கன அடி ஆகும்.[2] சென்னை அருகே உள்ள இத்தகைய ஏரிகள் இயற்கை அழகு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்தவை. சோழவரம் விமானதளம் அருகே இது அமைந்துள்ளது. இது இந்திய இராணுவம் தங்களது நடவடிக்கைகளைச் சோதித்துப் பார்க்கும் இடமாக உள்ளது. சோழவரம், புழல் ஏரிகள் கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள மக்கள், திருவள்ளூர் பிரதானச் சாலை, ரெட்ஹில்ஸ் சந்திப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்குக் கால்வாய்ப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
சோழவரம் ஏரி | |
---|---|
அமைவிடம் | சோழவரம், திருவள்ளூர், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 13.22757°N 80.15024°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
நீர்க் கனவளவு | 1.08 டி.எம்.சி. |
குடியேற்றங்கள் | சோழவரம் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.