சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் என்று தமிழில் அறியப்படும் The Three Princes of Serendip என்ற கதை, 1557ல் மிசெல் திரமெஃசினோ இத்தாலிய மொழியில் Peregrinaggio di tre giovani figliuoli del re di Serendippo என்ற பெயரில் வெனிசு மாநகரில் வெளியிட்ட கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும். திரமெஃசினோ இந்தக் கதையை கிறிசுதொபெரொ அரெமீனோ என்பவரிடமிருந்து கேட்டதாகச் சொன்னார். அமீர் குசுரௌ 1302ல் எழுதிய அசுத்து பிகித்து (Hasht-Bihisht)[1] என்ற பாரசீக மொழி விந்தைக்கதையின் முதல் தொகுப்பிலிருந்து இத்தாலிய மொழிக்குப் பெயர்த்து எழுதியவர் அரெமீனோ. பிரான்சிய மொழி வழியாக ஆங்கிலத்துக்கு வந்த இந்தக் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு தற்போது அச்சில் இல்லை.[2] இலங்கைத் தீவுக்குப் பாரசீகத்திலும் உருதுவிலும் உள்ள சேரந்தீவம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் தங்கத்தீவு என்று பொருள்படும் ஸ்வர்ணத்வீபா என்ற சொல்லிலிருந்தோ அல்லது முதன்முதல் "சேரன் தீவு" என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தோ வந்திருக்கலாம். இதற்கு மாறாக சிலர் இந்தச் சொல் "சிங்கள இனம் வாழுமிடம்" என்று பொருள்தரும் ஸிம்ஹலத்வீபா என்ற சொல்லிலிருந்து வந்தது என்று கருதுகிறார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.