நீளவால் கீச்சான் அல்லது செம்பழுப்புமுதுகு கீச்சான் என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பூச்சிகளையும், சுண்டெலிகளையும் வேட்டையாடும் ஒரு பறவையாகும். இவை ஆசியா முழுவதும் பரவலாக பரவியுள்ளன, மேலும் இவற்றின் வாழிட வரம்பில் காணப்படும் இப்பறவைகளின் இறகுகளில் வேறுபாடுகள் உள்ளன. இந்த இனமானது ஆசியாவின் பெரும்பகுதியில், பிரதான நிலப்பகுதி மற்றும் கிழக்கு தீவுக்கூட்டங்களில் காணப்படுகிறது. கிழக்கு அல்லது இமயமலை துணையினமானது, L. s. tricolor, சில சமயங்களில் கருந்தலை கீச்சான் என்று அழைக்கப்படுகிறது. துணையினங்களுக்கிடையில் இறகுகளில் கணிசமான வேறுபாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் நீண்ட, குறுகிய கருப்பு வால், உச்சந்தலையில் இருந்து கண்கள், நெற்றி உள்ள பகுதியையும் சேர்த்து கறுப்பு முகமூடி போன்று காணப்படும் கருப்பு நிறம், செம்பழுப்பு பிட்டம். பக்கவாட்டுகள் மற்றும் தோளில் சிறிய வெள்ளைத் திட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. திபெத்திய பீடபூமியில் இனப்பெருக்கம் செய்யும் சாம்பல்-முதுகு கீச்சான் (Lanius tephronotus) உடன் இது ஒரு மிகையினமாக கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் நீளவால் கீச்சான், காப்பு நிலை ...
நீளவால் கீச்சான்
Thumb
L. s. erythronotus (New Delhi, India)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passerine
குடும்பம்:
shrike
பேரினம்:
Lanius
இனம்:
L. schach
இருசொற் பெயரீடு
Lanius schach
L., 1758
துணையினம்
  • L. s. stresemanni Mertens, 1923
  • L. s. bentet Horsfield, 1822
  • L. s. suluensis (Mearns, 1905)
  • L. s. nasutus Scopoli, 1780
  • L. s. schach L. 1758
  • L. s. longicaudatus Ogilvie-Grant, 1902
  • L. s. tricolor Hodgson, 1837
  • L. s. caniceps Blyth, 1846
  • L. s. erythronotus (Vigors, 1831)
Thumb
Rough distribution of key forms
மூடு

துணையினங்கள்

இதில் ஒன்பது துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • L. s. erythronotus (விகோர்சு, 1831) – தெற்கு கசகத்தானிலிருந்து வடகிழக்கு ஈரான், ஆப்கானித்தான், பாகிஸ்தான் மற்றும் வட-மத்திய இந்தியா வரை
  • தெற்கத்திய நீளவால் கீச்சான் L. s. caniceps பிளைத், 1846 – மேற்கு, மத்திய, தென்னிந்தியா மற்றும் இலங்கை
  • L. s. tricolor ஹோட்சன், 1837 – நேபாளம் மற்றும் கிழக்கு இந்தியா மியான்மர் மற்றும் தெற்கு சீனா வழியாக வடக்கு லாவோஸ் மற்றும் வடக்கு தாய்லாந்து வரை
  • L. s. schach Linnaeus, 1758 – மத்திய, தென்கிழக்கு சீனா முதல் வடக்கு வியட்நாம் வரை
  • L. s. longicaudatus ஓகில்வி-கிராண்ட், 1902 – மத்திய, தென்கிழக்கு தாய்லாந்து, தெற்கு லாவோஸ்
  • L. s. bentet ஹார்ஸ்ஃபீல்ட், 1821 – மலாய் தீபகற்பம், பெரிய மற்றும் சிறிய சுந்தா மற்றும் போர்னியோ
  • L. s. nasutus ஸ்கோபோலி, 1786 – பிலிப்பைன்ஸ் (பலவான் குழு மற்றும் சுலு தீவுக்கூட்டம் தவிர)
  • L. s. suluensis (மியார்ன்ஸ், 1905) – சுலு தீவுக்கூட்டம் (தெற்கு பிலிப்பைன்ஸ்)
  • L. s. stresemanni மெர்டென்ஸ், 1923 – மாண்டேன் கிழக்கு நியூ கினியா

விளக்கம்

நீளவால் கீச்சான் என்பது வறண்ட திறந்த வாழ்விடங்களில் வாழக்கூடியது. இது புதரின் மேல் அல்லது கம்பியின் மீது பொதுவாக அமர்ந்திருக்கும். இதன் கண் வழியாக முகமூடி போன்ற கறுப்பு நிறப் பட்டை செல்லும். இந்த பட்டை இதன் பெரும்பாலான துணையினங்களின் நெற்றியையும் மறைக்கிறது. திரிகலர் (tricolor) மற்றும் நாசுடஸ் (nasutus) ஆகிய துணையினங்களின் முழு தலையும் கருப்பாக இருக்கும். எரித்ரோனோடஸ் (erythronotus) என்ற துணை இனமானத்தின் தோள்பட்டை சார்ந்த பகுதி சாம்பல் நிறத்திலும், மேல் முதுகில் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். அதே சமயம் தெற்கத்திய நீளவால் கீச்சான் தலையும் முதுகும் தூய சாம்பல் நிறத்தில் இருக்கும்.[3] இறக்கையில் மிகவும் முக்கிய வெள்ளைத் திட்டு இருக்கும். பாலினங்களுக்கு இடையில் பெரிய வேறுபாடு இல்லை.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.