செமினி
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்து உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்து உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
செமினி, (மலாய்: Bandar Semenyih; ஆங்கிலம்: Semenyih; சீனம்: 士毛月); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[1]
செமினி | |
---|---|
Semenyih | |
ஆள்கூறுகள்: 2°56′50″N 101°50′45″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 93,497 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43500 |
தொலைபேசி எண் | +60-3 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | காஜாங் நகராண்மைக் கழகத்தின் இணையத்தளம் |
காஜாங் நகரின் தென்கிழக்கே 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகருக்குத் தென்கிழக்கே 28 கி.மீ. (17 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது.
செமினியின் சுற்றுப்புறங்கள் மலைப் பாங்கான சூழலைக் கொண்டவை. இந்த நகருக்கு அருகில் உள்ள மிக உயர்ந்த மலை புக்கிட் ஆராங் (Bukit Arang); 560 மீ (1,840 அடி) உயரம் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த பல நீர்வீழ்ச்சிகளுக்கு, செமினி நகரம் பிரபலமானது.[2]
இந்த நகரத்தில் தீக்கோழி வளர்ப்புப் பண்ணை (Ostrich Wonderland Show Farm) மிகவும் பிரபலமானது.[3] காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை மற்றும் காஜாங் சில்க் நெடுஞ்சாலை போன்ற புதிய நெடுஞ்சாலைகள் மூலம் இந்த நகரம் மிகவும் எளிதாக அணுகக்கூடிய நகரமாக விளங்கி வருகிறது.
2001-ஆம் ஆண்டில், செமினி நகரத்திற்கு புரோகா நகரத்திற்கும் இடையில் 150 கோடி ரிங்கிட் செலவில் எரி உலை கட்டுவதற்கு நடுவண் அரசு திட்டம் வகுத்தது.[4][5] அந்தத் திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய எரி உலை திட்டமாகக் கருதப் பட்டது.
அதன் முக்கிய நோக்கம் கோலாலம்பூரின் கழிவுகளை அங்கு கொண்டு வந்து சுத்திகரிப்புச் செய்வது ஆகும். 2003-ஆம் ஆண்டில் செமினி, புரோகா வாழ் மக்கள் ஆலைக் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்கள். மலேசிய வரலாற்றில் அது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது.
2005-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றம் தற்காலிகமாகத் ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது. அந்த வகையில் பொது மக்கள் வெற்றி பெற்றார்கள். இருப்பினும் அந்த ஆலையின் கட்டுமானத்திற்கு அதிகம் செலவாகும் என்பதால் அந்தக் கட்டுமானம் நிறுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
செமினி நகரத்திற்கு மிக அருகில் புரோகா மலை உள்ளது. மலேசியா தித்திவாங்சா மலைத்தொடரின் விளிம்பில் இந்த நகரம் அமைந்து உள்ளது. இந்த நகரம் வெப்பமண்டல மழைக்காடுகளும் பசுமையான மலைகளாலும் சூழப்பட்டு உள்ளது.
அவற்றில் மிக முக்கியமானது புரோகா குன்று. பொதுவாக இந்தக் குன்றை புரோகா மலை என்றே பலரும் அழைக்கிறார்கள். ஏறக்குறைய 400 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை; அதன் தனித்துவமான தோற்றத்திற்குச் சிறப்புப் பெற்று உள்ளது.
அந்த மலையில் மரங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதைச் சுற்றிலும் வெப்ப மண்டல மழைக்காடுகள் சூழ்ந்து உள்ளன. அதுவே ஓர் அசாதாரணமான நிலவியல் அமைப்பாகும்.
புரோகா மலை மிக உயரமான மலை அல்ல. 400 மீட்டர் உயரம் தான். ஆக அதன் உயரத்தின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் அந்த மலையில் ஏறுவதற்கு அடிக்கடி வருகிறார்கள். சாதாரண நடைப் பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் மாறி வருகிறது.
அத்துடன் மலை அடிவாரத்தைச் சுற்றிலும் அழகு அழகான இயற்கைக் காட்சிகள். அதனால் அண்மைய காலங்களில் இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாகத் தடம் பதித்தும் வருகிறது.
2016-ஆம் ஆண்டில் ஓலா போலா Ola Bola எனும் உள்ளூர்த் திரைப் படத்தின் சில காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டன.[6] புரோகா மலையும் மிகப் பிரபலம் அடைந்தது. அதன் பின்னர் இந்தப் பகுதிகளில் சில மேம்பாட்டுத் திட்டங்கள் தீவிரம் அடைந்தன. அதனால் இந்த மலையின் தனித்துவமான அழகு அமைப்பும் நிரந்தரமாகச் சேதம் அடைந்து வருகிறது.
சிலாங்கூர்; உலு லங்காட் மாவட்டம்; செமினி நகர்ப்பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 788 மாணவர்கள் பயில்கிறார்கள். 75 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD4053 | செமினி | SJK(T) Ldg Dominion[7] | டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 43500 | செமினி | 23 | 8 |
BBD4057 | பண்டார் ரிஞ்சிங் | SJK(T) Ldg Rinching[8] | ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 43500 | செமினி | 368 | 39 |
BBD4060 | செமினி | SJK(T) Ladang Semenyih[9][10] | செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 47000 | செமினி | 397 | 28 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.