சென்னையில் சுகாதாரச் சேவை

From Wikipedia, the free encyclopedia

சென்னையில் சுகாதாரச் சேவை

சென்னையில் சுகாதாரம் (Healthcare in Chennai) என்பது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவையாகும். சென்னை வெளிநாடுகளிலிருந்து 45% பயணிகளையும் உள்நாட்டு சுகாதாரச் சுற்றுலாப் பயணிகளில் 30 முதல் 40% வரையும் சென்னை மருத்துவச் சுற்றுலா ஈர்க்கிறது.[1] இதனால் இந்நகரம் 'இந்தியாவின் ஆரோக்கியத் தலைநகரம்' என அழைக்கப்படுகிறது.[1][2][3] நகரம் முழுவதும் அமைந்துள்ள பல சிறப்பு மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு நாளும் 150 க்கும் மேற்பட்ட சர்வதேச நோயாளிகள் வருகின்றனர்.[3] மருத்துவத்திற்கான குறைந்த செலவுகள் மற்றும் குறைவான காத்திருப்பு காலம் போன்ற காரணத்திற்காக சென்னை நகரம் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது,[4] மேலும் நகரத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளில் வழங்கப்படும் வசதிகள் ஆகியவையும் இதில் அடங்கும்.[3]

Thumb
சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் முகப்புத் தோற்றம்.

வரலாறு

1664 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள இந்தியாவின் முதல் மருத்துவமனையானது, சர் எட்வர்ட் விண்டர், என்ற மருத்துவர் மூலம் கிழக்கு இந்திய கம்பெனியின் நோயுற்ற சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியது.[5] இந்த மருத்துவமனையானது 1772 ஆம் ஆண்டில் கோட்டையிலிருந்து வெளியேறியது, தற்போது விரிவுபடுத்தப்பட்ட ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையாக இன்று உள்ளது, 1842 ஆம் ஆண்டில் இம்மருத்துவமனை இந்தியர்களுக்கு திறக்கப்பட்டது.[6] 1785 ஆம் ஆண்டில், வங்காளம், சென்னை மற்றும் பாம்பே போன்ற மாநிலங்களில் 234 அறுவை நிபுணர்கள் கொண்ட மருத்துவ துறைகள் நிறுவப்பட்டன.[5]

Thumb
பல்நோக்கு சிறப்பு பொது மருத்துவமனை

வீட்டு பராமரிப்பு

வீட்டு சுகாதாரச் சேவைகள் மற்றும் வீட்டு செவிலியர் சேவைகள் இந்தியாவில் வளர்ந்து வரும் நிகழ்வுகள் ஆகும். சென்னை மற்றும் பெங்களூரை அடிப்படையாகக் கொண்டு 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இது போன்ற சேவைகளை வழங்குகின்றனர்.[7][8]

மருத்துவ கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தவிர, நான்கு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு தொழிலாளர் காப்புறுதி மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓம்ந்தூரர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய நான்கும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.[9]

மருத்துவ சுற்றுலா

சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்பும் நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பு (சிஐஐ) மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, நாட்டின் மருத்துவ சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதத்தை சென்னை ஈர்க்கிறது. 2013 ஆம் ஆண்டளவில், நகரம் ஒவ்வொரு நாளும் 200 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது.[10] சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்காக நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்களின் போக்குவரத்த்திற்காக, கொல்கத்தா மற்றும் சென்னை இடையே ஹவுராவிலிருந்து இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், இரயில் ஆம்புலன்ஸ் எக்ஸ்பிரஸ் என்றே அழைக்கப்படுகிறது.[11]

நைஜீரியா, கென்யா, புருண்டி, காங்கோ, பங்களாதேஷ், ஓமன் மற்றும் ஈராக் போன்ற வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து வெளிநாட்டவர்கள் குறிப்பாக மேம்பட்ட மருத்துவத்திற்கு இங்கு வருகிறார்கள்.[12] இருப்பினும், நகரத்திற்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கையைப் பற்றிய ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவிலுள்ள மற்ற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நிரந்தர நோயாளிகள் வந்து போவதற்கு முன்னணி மருத்துவமனைகள் பல உண்டு, மேலும் சர்வதேச நோயாளிகளுகென தனியான சிறப்பு வச்திகளும் செய்து தரப்படுகின்றன. ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ மையத்திற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 100 வெளிநாட்டு நோயாளிகள் வந்து போகின்றனர். டாக்டர். காமாட்சி நினைவு மருத்துவமனை மாதம் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 15 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை மாதம் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது சங்கர நேத்ராலயா ஒரு மாதத்திற்கு சுமார் 500 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது.[12] ஒவ்வொரு மாதமும் மியாட் மருத்துவமனை கிட்டத்தட்ட 300 வெளிநாட்டு நோயாளிகளைப் பெறுகிறது.[13]

அரசு சாரா நிறுவனங்கள்

சென்னை நகரம் சுகாதாரத்திற்கு இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் வலுவான தளமாக உள்ளது. இதற்கு 'இந்திய இதய சங்கம்' ஒரு உதாரணமாகும், இது இதய நோய் வராமல் தடுப்பதில் கவனம் கொள்கிறது.[14] தமிழ்நாட்டில் 1997 ஆம் ஆண்டிலிருந்து மனிதனின் உயிரற்ற உடலை நன்கொடையாகப் பெற்று செயல்படும் மோகன் அறக்கட்டளை மற்றொருஅரசு சாரா அமைப்பாகும்.[15]

விமர்சனங்கள்

சென்னை சுகாதரத்தின் 'மெக்கா' என அழைக்கப்பட்ட போதிலும், நகரில் உள்ள ஆறு தனியார் மருத்துவமனைகள் மட்டுமே 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவைகள் வழங்குவதற்கான தேசிய வாரியத்தின் அங்கீகாரம் பெ;ற்றுள்ளனன.[16][17]

ஜர்னல் ஆப் கிளினிக்கல் ஃபார்மசி அண்ட் தெரபிடிக்ஸ் என்ற பத்திரிகையின் 2011 ஆகஸ்ட் வெளியீட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஒன்று, நகரில் கிடைக்கக்கூடிய போலி மருந்துகளை மாதிரி ஆய்வுகள் மேற்கொள்ள போதிய வசதி இல்லை எனவும், 43 சதவீத மருந்துகள் தரமற்றவை எனவும் கூறுகிறது.[18]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.