சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சென்னை கோட்டை தொடருந்து நிலையம் (Chennai Fort Railway Station, நிலையக் குறியீடு:MSF) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் சென்னைக் கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் தடமும்,[2] சென்னைக் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. இது கடற்கரையை ஒட்டிய இரண்டாவது நிறுத்தம் ஆகும்.
சென்னை கோட்டை மதராசு கோட்டை | |||||
---|---|---|---|---|---|
Chennai MRTS & சென்னை புறநகர் இருப்புவழி நிலையம் | |||||
சென்னை கோட்டை தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை, தமிழ்நாடு - 600003 | ||||
ஆள்கூறுகள் | 13°04′59″N 80°16′57″E | ||||
உரிமம் | தென்னக இரயில்வே | ||||
நடைமேடை | 5 (2 MRTSக்கான நடைமேடைகள்) | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | பக்கவாட்டு நடைமேடை | ||||
நடைமேடை அளவுகள் | 1 | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MSF | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1931 (புறநகர் வழித்தடம்) 1 நவம்பர் 1995 (MRTS வழித்தடம்) | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் | 22,000 (ஒரு நாளைக்கு)[1] | ||||
|
சென்னை ஜார்ஜ் கோட்டையின் நினைவாக, இந்த நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் 260 சதுர மீட்டர் திறந்த நிறுத்தும் வசதிகளை கொண்டுள்ளது.[3]
இந்த நிலையத்திலிருந்து மதராசு மருத்துவக் கல்லூரி சில நூறு மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகிலேயே பிராட்வே பேருந்து நிலையம், பாரிமுனை, சென்னை பல் மருத்துவ கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவை அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.