From Wikipedia, the free encyclopedia
சூடாக்சா (Zootaxa) என்பது விலங்கியல் வகைப்பாட்டியலில் ஆய்வு வல்லுநர்களுக்கான சக மதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது மக்னோலியா அச்சகத்தால் (ஆக்லாந்து, நியூசிலாந்து) வெளியிடப்படுகிறது. 2001-ல் சி-குயியாங் சாங் என்பவரால் இந்த இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்விதழின் பதிப்புகள் வாரத்திற்குப் பலமுறை வெளியிடப்படுகின்றன. 2001 முதல் 2020 வரை, 60,000க்கும் மேற்பட்ட புதிய சிற்றினங்கள் இந்த ஆய்விதழில் விவரிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இது விலங்கியல் பதிவேடு ஆய்விதழில் பட்டியலிடப்பட்ட அனைத்து புதிய உயிரலகில் சுமார் 25% ஆகும்.[1] இந்த ஆய்விதழ் அச்சு மற்றும் இணையப் பதிப்பாகக் கிடைக்கின்றன.
சூடாக்சா Zootaxa | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Zootaxa |
துறை | |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | சி-குயியாங் சாங் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | மக்னோலிய அச்சகம் (நியூசிலாந்து) |
வரலாறு | 2001–முதல் |
வெளியீட்டு இடைவெளி: | ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் |
Open access | கலப்பு |
தாக்க காரணி | 1.091 (2020) |
குறியிடல் | |
ISSN | 1175-5326 (அச்சு) 1175-5334 (இணையம்) |
OCLC | 49030618 |
இணைப்புகள் | |
இந்த ஆய்விதழில் அதிக அளவு சுய-மேற்கோள்களைப் பதிவிட்டது. இதனால் 2019இன் ஆய்விதழின் தாக்கக் காரணி 2020-ல் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 34 ஆய்விதழ்களில் இதுவும் ஒன்று.[2] உயிரியலாளர் உரோசு மவுன்சு, புதிய சிற்றினங்கள் வகைப்பாட்டின் பெரும்பகுதியை வெளியிடும் ஒரு பத்திரிகைக்கு அதிக அளவு சுய-மேற்கோள் தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.[3] இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த முடிவு மாற்றப்பட்டது மற்றும் சூடாக்சாவால் வெளியிடப்பட்ட இதன் துறையின் ஏராளமான ஆவணங்களைக் கருத்தில் கொண்டு சுய மேற்கோள் அளவுகள் பொருத்தமானவை என்று பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.