இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சுப்புலட்சுமி ஜெகதீசன் (Subbulakshmi Jagadeesan, பிறப்பு: 24 சூன் 1947) என்வர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சரும், ஒன்றிய சமூக நீதி துறை முன்னாள் அமைச்சரும் ஆவார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் | |
---|---|
ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் | |
பதவியில் 2004–2009 | |
சமூக நலத்துறை அமைச்சர் (தமிழ்நாடு அரசு) | |
பதவியில் 1989–1991 | |
துணி, காதி, கைத்தறி, சிறுதொழில் துறை அமைச்சர் (தமிழ்நாடு அரசு) | |
பதவியில் 1977–1980 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | மு. கண்ணப்பன் |
தொகுதி | திருச்செங்கோடு |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1996–2001 | |
முன்னையவர் | கவிநிலவு தர்மராஜ் |
பின்னவர் | பி. சி. இராமசாமி |
தொகுதி | மொடக்குறிச்சி |
பதவியில் 1989–1991 | |
முன்னையவர் | சு. முத்துசாமி |
பின்னவர் | சு. முத்துசாமி |
தொகுதி | ஈரோடு |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | மு. சின்னசாமி |
பின்னவர் | எஸ். பாலகிருஷ்ணன் |
தொகுதி | மொடக்குறிச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 சூன் 1947 கொடுமுடி, ஈரோடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | திமுக |
பிற அரசியல் தொடர்புகள் | அதிமுக |
துணைவர் | ஏ. பி. ஜெகதீசன் |
உறவுகள் | கவுண்டர் வி. எஸ். சின்னுசாமி (தந்தை), சி. அங்கத்தாள் (தாய்) |
பிள்ளைகள் | 1 மகன், மருத்துவர் ஜெயபிரகாஷ் ஜெகதீசன் |
வாழிடம் | ஈரோடு |
கல்வி | பிஎஸ்சி., பி.டி., சிறீ சங்கர வித்யா சாலை, கொடுமுடி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி மற்றும் ஸ்ரீ சாரதா கல்லூரி, சேலம். |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: |
சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் நூழைவதற்கு முன்பு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உதவி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தவர். ஆசிரியர் பதவியில் இருந்து விலகிய இவர் அதிமுகவில் இணைந்து 1977 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதிமுக அமைச்சரவையில் கதர் துறை அமைச்சராக இடம்பெற்றார். 1980 இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.[1]
1989 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று திமுக அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக இவரும், இவரது கணவர் ஜெகதீசனும் 1992 இல் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 300 நாட்கள் சிறையில் இருந்த இவர்கள் 1998 இல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டனர்.
1996 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அத்தொகுதியில் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிருத்தி 1,030 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் தேர்தல் தள்ளி வைக்கபட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றிபெற்றார். இவரது அரசியல் வாழ்வில் ஈரோடு, மொடக்குறிச்சி, வெள்ளக்கோயில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்று மு. கருணாநிதியின் அமைச்சரவையில் இருமுறை இடம்பெற்றுள்ளார்.[2]
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமியை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3] பின்னர் அமைந்த மன்மோகன் சிங்கின் ஒன்றிய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் வலுவூட்டல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.[3]
திமுகவில் உயர் நிலைப் பதவிகளில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியனின் மறைவிற்குப் பிறகு சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவிக்கு நியமிக்கபட்டார். 2016 சடமன்றத் தேர்தலில் போட்டியிடாத இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இந்நிலையில் 2022 ஆகத்து 29 அன்று கட்சி பதவியிலிருந்தும், திமுகவிலிருந்தும் விலவகுவதாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக 2021 செப்டம்பரில் அறிவித்தார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.