Remove ads

எம். எஸ். சுந்தரி பாய் (M. S. Sundari Bai) பொதுவாக சுந்தரிபாய் (1923 - 12 மார்ச்சு 2006) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி பின் கதாநாயகி, எதிர்மறை வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர். சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தைக் கவனித்த அவரது பெற்றோர்கள், முறைப்படி கருநாடக இசைக் கற்றுத் தந்தனர்.

திரைப்படங்கள்

1937இல் சுகுணசரசா என்ற படத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. ஜெமினி நிறுவனத்தின் முதல் படமான மதனகாமராஜன் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். பின் கொத்தமங்கலம் சுப்புவின் மூன்றாவது மனைவியானார் சுந்தரிபாய்.

1945இல் ஜெமினி நிறுவனத்தார் தயாரித்த கண்ணம்மா என் காதலி[1] திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார்.

1948இல் ஜெமினி நிறுவனத்தின் மிகப்பெரிய தயாரிப்பான சந்திரலேகா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

ஜெமினியின் வெற்றிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்தார். வள்ளியின் செல்வன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

பிற திரைப்படங்கள்

Remove ads

மறைவு

உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் 12 மார்ச்சு 2006 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads