சுத்ஸ்டாப்பெல்
From Wikipedia, the free encyclopedia
சுத்ஸ்டாப்பெல் ⓘ (ஜெர்மன்) எஸ்எஸ் காவலர்கள் (SS Schutzstaffel) என சுருக்கமாக இட்லர் காலத்தில் ஜெர்மனியில் பணிபுரிந்த ஜெர்மனியப் பாதுகாப்பு படை வீரர்களை இப்படி அழைத்தனர். (Protective Squadron). ஆரம்பத்தில் ஊர்க்காவல் படையினராக செயல்பட்ட இப்பிரிவினர் பின்னர் ஃபியூரர் பாதுகாப்பு வீரர்களாகவும் செயல்பட்டனர். 1925 ல் இட்லரால் அவரின் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்ட இப்படைப்பிரிவு பின்னர் ஹெயின்ரிச் ஹிம்லர் தலைமையில் 1929 முதல் 1945 வரை நாசிக் கோட்பாட்டின் படி மனிதநேயத்திற்கு எதிராக செயல்பட இயக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் துவக்கப்பட்ட இப்பிரிவு பின்னாளில் பெரிய அமைப்பாக விரிவடைந்து செயல்பட்டது. தனிப்படைப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு பின்னாளில் ஜெர்மன் இராணுவத்துடன் இணைந்தே செயல்பட்டது. இந்தப் படைப்பிரிவினரே நாசிக் கைதிகள் சிறைச்சாலைகளில் (நாசி வதை முகாம், எ.கா. டேச்சு கைதிகள் சிறைச்சாலை) பாதுகாவலர்களாக பணிபுரிந்தவர்கள். இவர்களின் கட்டுபாட்டில்தான் இட்லர் காலத்தில் ஜெர்மனியின் அனைத்துச் சிறைச்சாலைகளும் இயங்கின. இப்படைப்பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் மால்மெடிப் படுகொலை (1944 ல் பல்ஜ் போரில் நடந்தவை) குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் இப்பிரிவில் பணிபுரிந்த பலர் நேச நாட்டுப் படையினரிடமிருந்து தப்பிப்பதற்காக தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் அங்கே ஒடிசா (ODESSA) என்ற அமைப்பின் பெயரால் செயல்பட்டனர்.
சுத்ஸ்டாப்பெல் | |
---|---|
![]() | |
சேவையில் | 1923–1945 |
நாடு | ஜெர்மனி |
வகை | ஊர்க்காவல் |
அளவு | 38 பிரிவு (1945) |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் |
ஜூலியஸ் ஷிரக் (1925–1926) ஜோசப் பெர்க்ஒல்டு (1926–1927) |
தோற்றம்

இப்படைப்பிரிவு 1923 களில் எஸ் ஏ ஸ்ட்ரோமப்டேலுங் (Sturmabteilung)என்ற அமைப்பாக செயல்பட்டு கொண்டிருந்தபொழுது இதன் பணி நாசித் தலைவர்களின் பேச்சாளர்களை பாதுகாக்கவும், நாசித் தளபதிகளை ஊர்வலத்தின் போது பாதுகாக்கும் தொண்டர்படையாகவும் செயல்பட்டது.[1][2] அப்போது தலைமையேற்று நடத்தியவர் எமில் மவுரிஸ். அப்பொழுது இதனை ஸ்டாப்ஸ்வாக் (Stabswache=Staff Guard) எனவும் அழைத்தனர். இவர்களை காவிச்சட்டையர் (Brown Shirts) என இடுகுறிப்பெயருடன் அவர்களின் சட்டையின் வண்ணத்தோடு ஒப்பிட்டு அழைத்தனர். பின்னர் 1923 ஆம் ஆண்டிலேயே இப்படைப்பிரிவுக் கலைக்கப்பட்டு பிறகு 1925 ல் மீண்டும் இட்லரால் எஸ் எஸ் என்று பெயர்மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை ஹெயின்ரிச் ஹிம்லரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வளர்ச்சி

1925 முதல் 1929 வரைநிலான கலத்தில் இவர்களின் எண்ணிக்கை 280 ஆக இருந்தது. ஹிம்லரின் தலைமைக்குப் பின் அடுத்த வருடத்திலேயே இவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 9 ஆயிரம் பேர் கொண்டப் பிரிவாக மாறியது. இம்லரின் பங்களிப்பினால் இப்படை பல வடிவங்களை பெற்றது. இவர் இத்தாலி முசோலினியின் கருஞ்சட்டையினரையும், நைட் டெம்ப்லரின் போப் இறைத் தொண்டர் படையினரையும் முன் மாதிரியாக வைத்துப் பல மாற்றங்களைச் செய்தார். போப் இறைத் தூதர்களின் கொள்கையான விசுவாசம், துணிவு, கீழ்படிதல் (Treu, Tapfer, Gehorsam=Loyal, Valient, Obedient) இம்மூன்றையும் இப்படைகளின் கொள்கையாக மாற்றினார். 1932 வரை இதன் சீருடை கருப்பு டை, கருப்பு குல்லா, மண்டையோட்டுச் சின்னம் என்றேயிருந்தது. அதன் பின் யூகோ பாஸ் (Hugo Boss) என்பவரால் இப்படையினருக்கு கருப்பு வண்ணச் சீருடை வடிவமைக்கப்பட்டது. போரின் நெருக்கத்தில் இந்த சட்டை சாம்பல் வண்ணம் கொண்டதாக மாற்றப்பட்டது.
சிறைச்சாலைகளில் இவர்கள் பணி

1934 ல் ஜெர்மனியில் துவக்கப்பட்ட அனைத்து சிறைகளிலும் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தியோடார் எய்க் தலைமையில் அமைந்த மண்டையோடுப் பிரிவின் (SS-Totenkopfverbande- SSTV=Skull Unit) கீழ் செயல்பட்டனர். இவை பல பிரிவுகாளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சிறைகளுக்கும் அனுப்பப்பட்டனர். இதில் மிகப்பெரிய சிறையான டேச்சுவுக்கும் அனுப்பப்பட்டனர். படிப்படியாக விரிவடைந்து 1941 ல் ஆயுதம் ஏந்திய எஸ் எஸ்(Waffen SS=Armed SS) ஆக மாற்றம் பெற்றனர். 1944 ல் ஜெர்மனி சிறைச்சாலைகள் இந்த வாபன் எஸ் எஸ் அமைப்பின் கட்டுபாட்டில்தான் இயங்கியது. இவர்கள் தான் அதிகமான அளவில் மனிதநேயத்திற்கு எதிரான செயல்களையும் குற்றங்களையும் இச்சிறைகளில் புரிந்தனர் என்று கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.