Remove ads

சிவ்ராஜ் சிங் சௌஃகான் (Shivraj Singh Chouhan ,இந்தி: शिवराज सिंह चौहान) (பிறப்பு 5 மார்ச்சு 1959) இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் மாநில தலைவராகவும் இருந்த சௌகான் 29 நவம்பர் 2005ஆம் ஆண்டில் முதல்முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் 2005 முதல் 12 டிசம்பர் 2018வரையிலும்; பின்னர் 23 மார்ச் 2020 முதல் 12 டிசம்பர் 2023 முடிய முதலமைச்சர் பதவி வகித்தவர். [1]

விரைவான உண்மைகள் சிவ்ராஜ் சிங் சௌஃகான், மத்தியப் பிரதேச முதலமைச்சர் ...
சிவ்ராஜ் சிங் சௌஃகான்
Thumb
2010இல் சிவ்ராஜ் சிங் சௌஃகான்
மத்தியப் பிரதேச முதலமைச்சர்
தொகுதிபுத்னி
பதவியில்
29 நவம்பர் 2005  12 டிசம்பர் 2018
பதவியில்
23 மார்ச் 2020  12 டிசம்பர் 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1959 (1959-03-05) (அகவை 65)
சேகோர், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சிபாஜக
துணைவர்சாதனா சிங் சௌகான்
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்போபால்
As of செப்டம்பர் 22, 2006
மூலம்:
மூடு

பிரேம் சிங் சௌகானுக்கும் சுந்தர் பாய் சௌகானுக்கும் மகனாக சேகோர் ஊரில் மார்ச்சு 5, 1959 அன்று பிறந்தவர்.1992ஆம் ஆண்டு சாதனா சிங்கை மணம் புரிந்து இரு மகன்கள் உள்ளனர். சிவ்ராஜ்சிங் சௌகான் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர்.

1972ஆம் ஆண்டு ராட்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் இணைந்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்தார். 1991ஆம் ஆண்டு முதல் விதிசா மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தற்போது அவரது பிறந்த மாவட்டமான சேகோரில் உள்ள புத்னி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.2008ஆம் ஆண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் வென்று இரண்டாம் முறையாக மாநில முதலமைச்சராக 12 திசம்பர்,2008 அன்று பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads