From Wikipedia, the free encyclopedia
சிவயோகமலர் ஜெயக்குமார் (இறப்பு: 16 சனவரி 2014) ஈழத்துப் பெண் எழுத்தாளர். அடிமையின் காதலி என்ற சரித்திரப் புதினத்தை எழுதியவர்.
சிவயோகமலர் ஜெயக்குமார் | |
---|---|
பிறப்பு | சிவயோகமலர் 1950 அல்வாய் மேற்கு, திக்கம், பருத்தித்துறை, இலங்கை |
இறப்பு | சனவரி 16, 2014 (அகவை 63–64) |
தொழில் | எழுத்தாளர் |
வகை | புதினம், சிறுகதை, கவிதை, நகைச்சுவைக்கதை |
அரச அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் பருத்தித்துறை, அல்வாய் மேற்கு, திக்கம் என்ற ஊரில் சின்னத்தம்பியார் கணேசு, சின்னம்மா ஆகியோருக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர்.[1] இவர் திக்கம் மெதடித்த மிசன் பாடசாலையிலும், பின்னர் பருத்தித்துறை மெதடித்த மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். பல்கலைக்கழகத்தில் இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்று, ஆசிரியத் தொழிலில் இணைந்தார். பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றி அரச நிருவாக சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் கணக்காளரும், ஊடகவியலாளருமான எஸ். ஜே. ஜெயக்குமார் என்பவரைத் திருமணம் புரிந்து கொழும்பு, வெள்ளவத்தையில் வசித்து வந்தார்.[1]
1984 இல் இவரின் முதல் சிறுகதை 'மகன் தேடிய வீடு' சிந்தாமணி வாரப் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள், இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. இவர் எழுதிய அடிமையின் காதலி சரித்திரப் புதினத்தை தினகரன் வாரமஞ்சரியில் 1999 இல் தொடராக வெளியிட்டது. பின்னர் இது நூலாக வெளிவந்தது. இவரது இலக்கியப் படைப்புகள் சப்பிரகமூவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞானவியல் பீடத்தின் பட்டதாரி (சிறப்பு) மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு “திக்கம் சிவயோகமலரின் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வு” என்ற நூலாக வெளியிடப்பட்டது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.