கொன்னிதெல சிரஞ்சீவி (தெலுங்கு: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் [1] என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.[சான்று தேவை] இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகத்து 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார்.[2] 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார்.[3] ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[4]

விரைவான உண்மைகள் சிரஞ்சீவி, இயற் பெயர் ...
சிரஞ்சீவி

இயற் பெயர் கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத்
பிறப்பு ஆகத்து 22, 1955 (1955-08-22) (அகவை 69)
நரசப்பூர், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா இந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1977 தொடக்கம் தற்போதுவரை
துணைவர் சுரேகா
பிள்ளைகள் சுஷ்மிதா, ராம் சரன் தேஜா, சிறீஜா
பெற்றோர் வெங்கட ராவோ, அஞ்சனா தேவி
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.