From Wikipedia, the free encyclopedia
சிப்பி என்பது நன்னீர் மற்றும் கடல்நீர் ஆகிய இரண்டிலும் காணப்படும் இருவோட்டுடலி வகுப்பைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும் ஆக்சிஜனை உள்ளிழுத்துக் கொள்கிறது சிப்பி. அதன் பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும்.
சிப்பி | |
---|---|
நீலச் சிப்பிகள், Mytilus edulis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | இருவோட்டுலி |
Subclasses | |
Pteriomorphia (கடல் சிப்பிகள்) |
முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.
இரண்டு வாரங்களில் நீந்த தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் தான் கிடைக்கிறது. அரேபியர்கள் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.
சிப்பிகள் உலகின் பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இதில் புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் உள்ளதால் உடல்நலனுக்கு ஏற்றது. [1]
Seamless Wikipedia browsing. On steroids.