அமெரிக்க வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
சார்லசு அகத்தசு யங் (Charles Augustus Young) (திசம்பர் 15, 1834 – ஜனவரி 4, 1908) பெயர்பெற்ற அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் சில நாட்கள் நிமோனியா காய்ச்சல் வாய்ப்பட்டு 1908 ஜனவரி 4 ஆம் நாளன்று தன் வீட்டில் இறந்தார். இவர் பல சூரிய மறைப்புகளைக் கண்டுள்ளார். சூரியக் கதிர்நிரலியலில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் 1872 ஆகத்ஹு 3 இல் கதிர்நிரல்மானி வழியாக சூரியகனல் உமிழ்வைக் கண்டார். மேலும் இது புவியின் காந்தப் புயலுடன் ஒருங்கமைந்த்தையும் கண்ணுற்றார்.
சார்லசு அகத்தசு யங் | |
---|---|
பிறப்பு | ஃஅனோவர், நியூஃஆம்ப்சயர் | திசம்பர் 15, 1834
இறப்பு | சனவரி 3, 1908 73) ஃஅனோவர், நியூஃஆம்ப்சயர் | (அகவை
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியல் |
பணியிடங்கள் | பிரின்சிடன் |
கல்வி கற்ற இடங்கள் | டார்மவுத் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஃஎன்றி நோரிசு இரசல் |
விருதுகள் | ஜான்சென் பதக்கம் (1890)[1] |
டார்மவுத் கல்லூரியில் பட்டம்பெற்ற இவர் அங்கு 1865 இல் பேராசிரியரானார். பிறகு அங்கே 1877 வரை பணிபுரிந்த பின்னர் பிரின்சிடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இவர் நல்ல கல்வியாளர்; பல பரவலாகப் பயன்பட்ட பல வானியல் பாட நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் வானியல் கையேடும் ஒன்றாகும். பல ஆண்டுகட்குப் பின் ஃஎன்றி நோரிசு இரசலும் இரேமாண்டு சுமித் தூகானும் ஜான் குவின்சி சுடீவர்ட்டும் தாம் எழுதிய இருதொகுதி வானியல் நூலை Astronomy: A Revision of Young’s Manual of Astronomy எனத் தலைப்பிட்டனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.