சாரயேவோ
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாரயேவோ (ஆங்கில மொழி: Sarajevo, செர்பிய மொழி: Сарајево) பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.இந்த மாநகரம் 305,242 மக்கள் வாழும் நான்கு நகராட்சிகளையும் 423,645மக்கள்தொகை கொண்ட சாரயேவோ கன்டன் எனப்படும் பல்லின நகரையும் உள்ளடக்கியுள்ளது.(as of ஆகத்து 2009[update]). இது சாரயேவோ கன்டனின் மையமாகவும் பொசுனியா எர்செகோவினா கூட்டமைப்பு தலைநகரமாகவும் உள்ளது. பொசுனியாப் பகுதியில் உள்ள சாரயேவோ பள்ளத்தாக்கில் மில்யக்கா ஆற்றின் அருகாமையில் தினாரிக் ஆல்ப்ஸ் மலைகள் சூழ அமைந்துள்ளது.
சாரயேவோ | |
---|---|
சாரயேவோ நகரம் Grad Sarajevo | |
பொசுனியாவும் எர்செகோவினாவும் சூழ்ந்திருக்கும் சாரயேவோ (கரும் பச்சை, நடுவில்) | |
நாடு | பொசுனியா எர்செகோவினா |
கூட்டமைப்பு | பொசுனியாவும் எர்செகோவினாவும் |
மாவட்டம் (கன்டன்) | சாரயேவோ கன்டன் |
நகராட்சி | 4 |
அரசு | |
• மேயர் | அலியா பேமன் (பொசுனியா எர்செகோவினா சமூக சனநாயகக் கட்சி) |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 141.5 km2 (54.6 sq mi) |
ஏற்றம் | 500 m (1,640 ft) |
மக்கள்தொகை (30 சூன் 2009)[2] | |
• நகரம் | 3,05,242 |
• அடர்த்தி | 2,157.2/km2 (5,587/sq mi) |
• நகர்ப்புறம் | 3,05,242 |
• பெருநகர் | 4,23,645 |
• மக்கள் | சாரயேவர் |
நேர வலயம் | ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
அஞ்சல் குறி | 71000 |
இடக் குறியீடு | +387 (33) |
இணையதளம் | சாரயேவோ நகரம் |
இந்நகரில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு சமயத்தினர், இசுலாமியர்,கிறித்தவர் (மரபுவழியினர் மற்றும் கத்தோலிக்கர்), யூதர்கள் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர்.[3] இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட சமய சகிப்பு நிறைந்த வரலாறு காரணமாக இதனை ஐரோப்பாவின் யெருசலம் எனக் குறிப்பிடுகின்றனர்.[4] பயணியர் புத்தக நிறுவனம் லோன்லி பிளானட்டின் உலக நகரங்களில் சிறந்த நகரங்களின் பட்டியலில் 43ஆவதாகத் திகழ்கிறது.[5]
இங்கு குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தையக் காலத்திலிருந்தே இருப்பினும், 15ஆம் நாற்றாண்டின் ஓட்டோமான் பேரரசின் கோட்டையாகவே அறியப்படுகிறது.[6] வரலாற்றில் பல நிகழ்வுகளால் உலக கவனத்தை சாரயேவோ தன்னிடம் ஈர்த்திருக்கிறது: 1914ஆம் ஆண்டு இங்கு நடந்த ஆஸ்திரிய இளவரசர் ஃபெர்டினன்டின் கொலையே முதல் உலகப் போருக்கு வித்திட்டது.எழுபது ஆண்டுகள் கழித்து 1984ஆம் ஆண்டு இங்கு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பெற்றது.அண்மையில் நடந்த பொசுனியாப் போரில் தற்கால படைத்துறை வரலாற்றிலேயே மிக நீண்ட முற்றுகை இடப்பட்ட நகரமாக செய்திகளில் இடம் பெற்றது. போரின் தாக்கத்திலிருந்து சாரயேவோ மீண்டு பொசுனியா எர்செகோவினா நாட்டின் பண்பாடு மற்றும் பொருளியல் மையமாக திகழ்கிறது.[7] முழுமையும் மின்னாற்றலால் இயங்கும் டிராம் வண்டிசேவையை ஐரோப்பாவிலேயே முதலாவதாகவும் உலகில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை அடுத்து இரண்டாவதாகவும் நடத்துகிறது.[8] திசம்பர் 2009இல் லோன்லி பிளானட் சாரயேவோ நகரை 2010ஆம் ஆண்டு காணவேண்டிய பத்து நகரங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.[9]
பொசுனியா எர்செகோவினா நாடு, அதன் கீழுள்ள பொசுனியா எர்செகோவினா கூட்டமைப்பு மற்றும் சாரயேவோ கன்டன் ஆகியவற்றின் தலைநகராக சாரயேவோ விளங்குகிறது. தவிர, மற்றொரு அரசு அமைப்பான சிறுப்ஸ்கா குடியரசின் சட்டப்படியான தலைநகரமாகவும் விளங்குகிறது. இவ்வமைப்புகள் ஒவ்வொன்றிற்குமான சட்டமன்றங்கள்,நீதி யமைப்புகள் இந்நகரில் உள்ளன. பிற நாடுகளின் தூதரகங்களும் சாரயேவோவில் அமைந்துள்ளன.
பொசுனியப் போரின் போது பொசுனியா செர்கோவினாவின் நாடாளுமன்றக் கட்டிடம் மிக்க பாதிப்படைந்தது. ஆகவே அலுவலர்களும் ஆவணங்களும் தரைமட்டத்திலிருந்த அலுவலகம் ஒன்றிற்கு மாற்றப்பட்டு பணியைத் தொடர்ந்தனர். 2006ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரமைப்புப் பணி 2007ஆம் ஆண்டு துவக்கத்தில் முடிந்தது. இதன் செலவில் 80% வரை கிரேக்க அரசு ஏற்றுக்கொண்டது. மீதத்தை பொசுனியா எர்செகோவினா அரசு ஏற்றது.
நகரம் நான்கு நகராட்சிகளைக் (சென்டார்,நோவி கிராட்,நோவோ கிராட்,ஸ்டாரி கிராட்) கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அவர்களுக்கென தனி அரசமைப்பைக் கொண்டுள்ளன;ஒருங்கிணைந்து நகர அரசை தமது அரசியலமைப்புடன் கொண்டுள்ளன. அரசின் நிர்வாகத் பிரிவில் (போசாங்கி: Gradska Uprava)மேயரும் இரு துணைவர்களும் அமைச்சரவையும் செயல்படுகிறது. அரசின் சட்டப்பிரிவில் அவைத்தலைவருடன் 28 உறுப்பினர்களும் இரு துணைவர்களும் மற்றும் செயலாளர் ஒருவரும் கொண்ட நகராட்சி மன்றம் Gradsko Vijeće அமைந்துள்ளது. நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சிகளின் மக்கள்தொகைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நகர அரசு நீதிப்பிரிவு ஒன்றையும் கொண்டுள்ளது.[10]
சாரயேவோவின் நகராட்சிகள் மேலும் உட்சமூகங்களாகப்(Mjesne zajednice) பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு கூடுதல் அதிகாரமெதுவும் இல்லையாயினும் சாதாரண மக்கள் நகர அரசில் பங்கேற்குமுகமாக இவை அமைந்துள்ளன. நகரின் முக்கிய பகுதிகளை ஒட்டி இவை அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.