சாமுவேல் அரியரத்தினம் சபாபதி (Samuel Ariaretnam Sabapathy, 6 செப்டம்பர் 1898 – 12 பெப்ரவரி 1964 ) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், முதலாவது யாழ்ப்பாண முதல்வரும் ஆவார்.[1] இவர் யாழ்ப்பாண நகரசபைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
சாம் அ. சபாபதி | |
---|---|
Sam A. Sabapathy | |
1வது யாழ்ப்பாண முதல்வர் | |
பதவியில் 6 சனவரி 1949 – 31 டிசம்பர் 1949 | |
பின்னவர் | கே. பொன்னம்பலம் |
பதவியில் 11 சனவரி 1952 – 31 டிசம்பர் 1955 | |
முன்னையவர் | கே. பொன்னம்பலம் |
பின்னவர் | காதி எம். ஏ. எம். எம். சுல்தான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1898 |
இறப்பு | 12 பெப்ரவரி 1964 65) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
முன்னாள் கல்லூரி | பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் |
தொழில் | வழக்கறிஞர் |
இளமைக்காலம்
சபாபதி 1898ம் ஆண்டு செப்டெம்பர் 6ம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் வரணியைச் சேர்ந்த கனகசபைப்பிள்ளை, தாயார் அன்னம்மா.[2] இவரது உடன்பிறந்தாரான எஸ். குலேந்திரன் முன்னாள் யாழ்ப்பாண ஆயர் ஆவார்.[2] யாழ் பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கல்லூரியின் மாணவர் தலைவராகவும் பணியாற்றினார்.[2] விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டிருந்த சபாபதி, கல்லூரியின் துடுப்பாட்டக் குழுத் தலைவராக இருந்ததுடன், கால்பந்தாட்டக் குழுவிலும் சேர்ந்து விளையாடினார். சபாபதி தொல்புரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகளான கனகேஸ்வரியை மணம் புரிந்தார். இவர்களுக்குப் பத்மினி என்னும் மகள் உள்ளார்.[2]
தொழில்
சபாபதி தனது கல்வியை முடித்துக்கொண்டு குற்றவியல் சட்டத்தில் சிறப்புத் தகைமை பெற்ற சட்டத்தரணியாக சட்டத்தொழிலில் நுழைந்தார். இவர் யாழ்ப்பாணத்திலேயே பணியாற்றினார். யாழ்ப்பாண நகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 1937 தொடக்கம் 1939 வரை நகர சபைத் தலைவராகப் பதவி வகித்தார். 1949ல் யாழ்ப்பாணம் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டபோது, சபாபதி அதன் முதல் நகர முதல்வரானார்.[1][2] யாழ்ப்பாணப் பொது நூலகம், சுப்பிரமணியம் பூங்கா, நல மையங்கள்/ மகப்பேற்று மருந்தகங்கள் போன்ற பல வசதிகள் இவர் காலத்தில் உருவாயின. பொது நூலகத்துக்கான அடிக்கல் 1953 மார்ச் 29 அன்று இவரால் நாட்டப்பட்டது.[3][4]
இறப்பு
சபாபதி 1964 பெப்ரவரி 12 ஆம் தேதி தனது 66 ஆவது வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.