சாகசப் பூங்கா, கொல்லம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாகசப் பூங்கா (Adventure Park) என்பது கேரள மாநிலத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்காவாகும். ஆஸ்ரமம் சாகசப்பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது. இது நகரத்திற்குச் சொந்தமான 48 ஏக்கர்கள் (19 ha) பரப்பளவுள்ள நிலத்தில் 1980 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.[2] கேரளாவின் பெருமைக்குரிய இடமான, அஷ்டமுடி ஏரியின் புலத்தில் அமைந்துள்ள இந்த இடம் ஆசிரமம் பிக்னிக் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது. கொல்லம் நகரில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இந்த பூங்கா உள்ளது. கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் படகு கிளப்பில் இருந்து இல்லப் படகுகள், சொகுசுப் படகுகள் மற்றும் வேகப் படகுகளில் வழக்கமான படகுச்சவாரி எனப்படுகின்ற சுற்றுலாப் பயணங்களை நடத்துகிறது. இந்த பூங்காவிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலங்கள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. அதனால் அருகி வருகின்ற நிலையில் உள்ள பல வகையான மரங்கள் இந்தப் பூங்காவில் இன்னும் காணப்படுகின்றன.[3][4]
சாகசப் பூங்கா ஆசிரம சாகசப் பூங்கா | |
---|---|
வகை | நகர்ப்புற பூங்கா |
அமைவிடம் | ஆசிரமம், கொல்லம், இந்தியா |
ஆள்கூறு | 8°53′50″N 76°35′06″E |
பரப்பளவு | 48 ஏக்கர்கள் (0.19 km2)[1] |
உருவாக்கம் | 1980 |
உரிமையாளர் | கொல்லம் முனிசிபல் கார்ப்பரேசன் |
நிலை | ஆண்டு முழுவதும் பார்வையிடலாம் |
ஆசிரம சாகசப் பூங்காவைச் சுற்றிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் காணத்தக்க வகையில் பல இடங்களும், காட்சிப் பொருள்களும் உள்ளன. அவை பின்வருமாறு அமையும்.
2012 ஆம் ஆண்டில், அப்போதைய கேரள சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஏ.பி. அனில்குமார் 10 சிற்பிகளை ஆசிரமம் சாகச பூங்காவில் அறிமுகப்படுத்தி வைத்தார். பல்வேறு கொல்லம் சார்ந்த வணிகக் குழுக்கள் அளித்த ரூ.8 லட்சம் நிதி உதவியுடன், 'பருவ கால சிற்பங்கள்' என்ற பெயரில் 10 நாள் மாநில அளவிலான சிற்பக்கலை முகாமின் ஒரு பகுதியாக இது அப்போது நடைபெற்றது. ஆர்யநாட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் தியானம், வி. சதீசன் என்பவரின் கதை சொல்பவர், சிவனின் முழக்க மூட்டை, சென்லாய் அவர்களின் தொந்தரவு தொந்தரவு செய்யாதீர்கள், சாஜு மன்னத்தூர் அவர்களின் அவள், குருபிரசாத் அவர்களின் இதயம் மற்றும் மூளை இல்லா அன்பு, சவாரா விஜயன் அவர்களின் புத்தர் 99 மற்றும் பிஜு பாரட்டான் பாதிக்கப்பட்டவர் ஆகிய, சாகசப் பூங்காவைச் சேர்ந்த முக்கியமான சிற்பிகள் வடிவமைத்த சிற்பங்கள் கொல்லம் நகரத்தில் முக்கியமான இடங்களில் கண்களைக் கவரும் காட்சிப்பொருள்களாக அமைந்துள்ளன.[5]
மாநிலத்தின் முதல் திறந்தவெளியில் அமைந்த உடற்பயிற்சிக் கூடம் ரூ .15 லட்சம் செலவில் ஆசிரமம் சாகசப் பூங்காவில் செயல்பட்டு வருகிறது. கொல்லம் நகரில் ஆசிரமத்தின் மைதானம் பகுதிக்கு காலை நேரத்தில் நடைபயிற்சி செய்ய வருபவர்கள் இதனால் மிகவும் பயன் அடைகின்றார்கள். முன்னாள் கொல்லம் ராஜ்ய சபாவின் நாடாளுமன்ற உறுப்பினரான கே.என்.பாலகோபால் அவரது உள்ளூர் வளர்ச்சி நிதியத்தில் இருந்து பணம் ஒதுக்கீடு.செய்து தந்த வகையில் அதிலிருந்து 19 உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்கி நிறுவப்பட்டுள்ளன, அக்டோபர் இறுதி வாக்கில் இது பொது மக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது.[6]
ஆசிரம சாகசப் பூங்காவின் ஓரத்தில் அஷ்டமுடி ஏரியின் கரையில் வளரும் அடர்த்தியான சதுப்பு நிலங்கள் இந்த இடத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக அமைந்துள்ளது. கேரள மாநில பல்லுயிர் வாரியமானது ஆசிரம சதுப்புநில வனப்பகுதிக்கு பல்லுயிர் பாரம்பரியம் என்ற குறியீட்டை வழங்கியுள்ளது. மிகவும் அரிய வகையைச் சேர்ந்த சிசைஜியம் திருவிதாங்கிகம் இன சதுப்பு நிலங்கள் ஆசிரம சதுப்பு நிலப் பகுதியில் பரவலாக உள்ளன. பல வகையான சதுப்பு நிலங்கள் மற்றும் அத்தன்மையைச் சார்ந்த சதுப்புநிலங்களும் இப்பகுதியில் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதியானது ஒரு கடலோர மழைக்காடுகளுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணாதிசயங்களையும் பெற்று அமைந்துள்ளது. மேலும் பல வகையான காட்டு விலங்குகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட தாவரங்கள் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. பல வகையான கடல் உயிரினங்களுக்கு ஆதாரமான இடமாக இருப்பதோடு புலம் பெயர்ந்த பறவைகளுக்கான இடமாகவும் இது உள்ளது.[7]
ஆசிரம சாகசப் பூங்காவில் கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் நடத்துகின்ற படகுச் சவாரி கொல்லம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இல்லப் படகுகள், சொகுசுப் படகுகள் மற்றும் வேகப் படகுகளில் வழக்கமான படகுச் சவாரிகள் படகு கிளப்பில் இருந்து இயக்கப்படுகின்றன. தம் விருப்பத்திற்கு ஏற்றபடி ஆடம்பர பயணப் படகுகள், பவர் படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் போன்ற பல்வேறு வகையான படகுகளை படகுத் துறையில் இருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆசிரமத்தில் உள்ள பிரித்தானிய ரெசிடென்சி அரசாங்க விருந்தினர் மாளிகை என்றும் ரெசிடென்சி பங்களா என்றும் அழைக்கப்படுகிறது. இது சுற்றுலா கிராம வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி அரண்மனையாகும்.. இது கர்னல் ஜான் மன்ரோ என்பவரால் 1811 ஆம் ஆண்டிற்கும் 1819 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்தாகும். இது தற்போது அரசு விருந்தினர் மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இது கொல்லத்தின் குறிப்பிடத்தக்க இடமான சின்னகடா கடிகார கோபுரம் போன்று செம்மாந்து நிற்கிறது. இந்த இடம் கேரளாவில் பிரபலமான திரைப்படங்கள் எடுப்பதற்கான ஒரு இடமாகவும் உள்ளது. மலையாள திரைப்படமான மனு மாமா என்ற திரைப்படத்தின் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு திரைப்படக் காட்சிகள் பிரித்தானிய ரெசிடென்சி மற்றும் சாதனைப் பூங்கா வளாகத்தில் படமாக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.