சம்பேலஸ்

பிலிப்பைன்ஸ் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

சம்பேலஸ்

சம்பேலசு (Zambales) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் இபா ஆகும். இது 1578 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 230 கிராமங்களும், 13 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அமர் டெலோசோ ( Amor Deloso) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,053.6 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக சம்பேலசு மாகாணத்தின் சனத்தொகை 590,848 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 35ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 50ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம், கப்பம்பங்கன் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையிலேயே தங்கியுள்ளது. மேலும் இமாகாணத்தின் நிக்கல் போன்றவற்றை அகழ்தலும் அதிகளவில் தற்போது இடம்பெற்று வருகிறது. எனினும் அடிப்படையில் இது விவசாய மாகாணமே ஆகும். இங்கு அரிசி, சோளம் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

விரைவான உண்மைகள் சம்பேலசு, நாடு ...
சம்பேலசு
மாகாணம்
Thumb
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய லூசோன்
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)
அதிகாரப்பூர்வ இணையதளம்
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.