From Wikipedia, the free encyclopedia
கந்தையா திருஞானசம்பந்தன் (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்பெயர் கொண்ட சம்பந்தன் ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
கந்தையா திருஞானசம்பந்தன் | |
---|---|
பிறப்பு | திருநெல்வேலி, யாழ்ப்பாணம் | 20 அக்டோபர் 1913
இறப்பு | சனவரி 7, 1995 81) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | சம்பந்தன் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | சிறுகதை எழுத்தாளர், கவிஞர் |
பெற்றோர் | கந்தையா, இராசமணி |
சம்பந்தன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]
சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன.[1] இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் "சம்பந்தன் சிறுகதை மலராக" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.[1]
1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.[1]
1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.[1]
சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் "சம்பந்தன் விருது" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.