From Wikipedia, the free encyclopedia
சன் டைரக்ட் (ஆங்கிலம்: Sun Direct) இந்தியாவில் உள்ள டி. டீ. எச் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த செயற்கைக்கோள் சேவை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சன் டைரக்ட் இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4B மற்றும் (MEASAT) 3 செயற்கைக்கோள்கள் உதவியுடன் எம்பெக்-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. [1][2] இது இந்தியாவின் முதல் எம்பெக் - 4 (MPEG-4) தொழில்நுட்பத்தை வழங்கும் டி. டீ. எச் சேவை வழங்குனர்.
வகை | கூட்டுக் குழுமம் |
---|---|
நிறுவுகை | 2005 |
தலைமையகம் | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | கலாநிதி மாறன் (மேலாளர் & முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | செயற்கைக்கோள் தொலைக்காட்சி |
தாய் நிறுவனம் | சன் குழுமம் (80%) ஆஸ்ட்ரோ குழுமம் (20%) |
இணையத்தளம் | sundirect.in |
கேபிள் தொலைக்காட்சி மற்றும் மற்ற டி. டீ. எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, டாட்டா ஸ்கை, டிஷ் டிவி மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.
சன் டைரக்ட் சன் குழுமமும், மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமமும் இணைந்து தொடங்கப்பட்டது. ஜனவரி 27, 1997-ம் ஆண்டு, மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டது. திசம்பர் 2007-இல் டி. டீ. எச். நிறுவனங்களுக்கான இந்திய அரசாங்கத்தின் செயற்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார், 115 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சன் டைரக்டின் 20% பங்குகளை ஆஸ்ட்ரோ நிறுவனம் வாங்கியது.[3]சன் டைரக்ட், பிப்ரவரி 16, 2005-இல் பதிவு செய்யப்பட்டது.[4] இன்சாட் - 4சி செயற்கைக்கோள் தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து, சன் டைரக்டின் விரிவாக்கம் சற்று சரிந்தது. [5] கடைசியாக, இந்த சேவை 18, ஜனவரி, 2008-க்குப் பிறகு இன்சாட் - 4பி மூலமாகவே சரி செய்யப்பட்டது.
சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ் எனும் கிரகிக்கும் கருவி மற்றும் டிஷ் போன்றவற்றை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் மாத கட்டணமாக வெறும் 75-ம், தற்போது சராசரியாக 165-ம் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
திசம்பர் 2009-ம் ஆண்டில் மும்பையில் தன்னுடைய சேவையைத் தொடங்கிய சன் டைரக்ட், 2009-ம் ஆண்டில் மூன்று மில்லியன் சந்தாதாரர்களுடன், இந்தியாவின் இரண்டாவது பெரிய டி. டீ. எச். நிறுவனமாக உருவானது.[6]
2010-ம் ஆண்டு சூலைத்திங்கள் 7-ஆம் நாள் ஏற்பட்ட இன்சாட் - 4பி செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு[7][8] காரணமாக சன் டைரக்டின் ஒளிபரப்பு சேவை பாதிக்கப்பட்டது, அனைத்துச் சேவைகளும் மீண்டும் தொடங்கும் வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவை வழங்கப்பட்டது.[2] தற்போது, சன் டைரக்ட் இன்சாட் - 4 மற்றும் மீசாட் -3 செயற்கைக்கோள்கலை பயன்படுத்தி வருகின்றது. ரிலையன்ஸ் பிக் டிவியும், இதே மீசாட் -3 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சன் டைரக்ட் நிறுவனம் இரண்டு செயற்கைக்கோளில் இயங்கும் இரண்டாவது டி. டீ. எச். நிறுவனமாகும்.
சன் டைரக்ட் இந்தியாவின் முதல் எச்டி (உயர் வரைவு) சேவையை 2 அலைவரிசைகளுடன் தொடங்கியது. பிறகு சன் உயர் வரைவுத் தொலைக்காட்சி, கே உயர் வரைவுத் தொலைக்காட்சி, சன் மியூசிக் உயர் வரைவுத் தொலைக்காட்சி, ஜெமினி உயர் வரைவுத் தொலைக்காட்சி என சேவையை ஆங்கில அலைவரிசகளுக்கு நிகராக உயர் வரைவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதன் முறையாக உயர் வரைவுச் சேவை மூலம் வழங்கியது சன் டைரக்ட் நிறுவனமாகும், இதற்காக சோனி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. [6]
2012 மார்ச் மாத நிலவரத்தின்படி,சுமார் 7.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் சன் டைரக்டை பயன்படுத்தி வருகின்றனர்.[9] 2012, பிப்ரவரி வரையில், இந்தியாவில் சுமார் 30 மில்லியன் டி. டீ. எச். வாடிக்கையாளர்கள் உள்ளனர்.[10]
இந்த அட்டவணை 2012 மார்ச், சன் டைரக்டால் வழங்கப்பட்டது ஆகும்.[11]
அலைவரிசை | பெயர் |
---|---|
சன் டைரக்ட் உதவி அலைவரிசை | |
001 | தகவல் அலைவரிசை |
தமிழ் | |
100 | சன் தொலைக்காட்சி |
102 | கே தொலைக்காட்சி |
104 | சன் மியூசிக் |
106 | ஆதித்யா தொலைக்காட்சி |
108 | தமிழ் சினிமா க்ளப் |
109 | சன் ஆக்சன் |
110 | சுட்டி தொலைக்காட்சி |
111 | சன் லைப் |
112 | சன் செய்திகள் |
114 | செய்திகள் |
116 | கலைஞர் தொலைக்காட்சி |
118 | ஜெயா தொலைக்காட்சி |
120 | ஜெயா ப்ளஸ் |
121 | ஜீ தமிழ் |
122 | பொதிகை தொலைக்காட்சி |
124 | ராஜ் தொலைக்காட்சி |
126 | மக்கள் தொலைக்காட்சி |
128 | மெகா தொலைக்காட்சி |
130 | ஸ்டார் விஜய் |
132 | வசந்த் தொலைக்காட்சி |
133 | புதிய தலைமுறை |
134 | கேப்டன் தொலைக்காட்சி |
தெலுங்கு | |
150 | ஜெமினி தொலைக்காட்சி |
152 | ஜெமினி மூவீஸ் |
154 | ஜெமினி மியூசிக் |
156 | ஜெமினி காமெடி |
158 | தெலுங்கு சினிமா க்ளப் |
159 | ஜெமினி ஆக்சன் |
160 | குஷி தொலைக்காட்சி |
161 | ஜெமினி லைப் |
162 | ஜெமினி செய்திகள் |
166 | இ தொலைக்காட்சி தெலுங்கு |
168 | மா தொலைக்காட்சி |
170 | ஜீ தெலுங்கு |
172 | விஸ்ஸா |
176 | இ தொலைக்காட்சி 2 |
178 | தொலைக்காட்சி 9 தெலுங்கு |
182 | என் தொலைக்காட்சி |
184 | பக்தி தொலைக்காட்சி |
186 | சாக்சி தொலைக்காட்சி |
188 | ஏபிஎன் ஆந்த்ர ஜோதி |
190 | டிடி சப்தகிரி |
மலையாளம் | |
200 | சூர்யா தொலைக்காட்சி |
202 | கிரண் தொலைக்காட்சி |
204 | மலையாளம் சினிமா க்ளப் |
205 | சூர்யா ஆக்சன் |
206 | கொச்சு தொலைக்காட்சி |
208 | ஏசியாநெட் |
210 | ஏசியா நெட் ப்ளஸ் |
212 | கைராலி |
214 | கைராலி வெ |
215 | மழவில் மனொரமா |
216 | அம்ரிதா |
220 | ஜெய்ஹிந்த் |
218 | டிடி மலையாளம் |
222 | ஏசியா நெட் செய்திகள் |
224 | மனொரமா செய்திகள் |
226 | இந்தியா விசன் |
228 | ஜீவன் தொலைக்காட்சி |
230 | ரிப்போர்ட்டர் |
கன்னடம் | |
250 | உதயா தொலைக்காட்சி |
252 | உதயா மூவீஸ் |
254 | உதயா மியூசிக் |
256 | உதயா காமெடி |
258 | கன்னடா சினிமா க்ளப் |
259 | சூரியன் தொலைக்காட்சி |
260 | சின்டு தொலைக்காட்சி |
262 | உதயா செய்திகள் |
264 | இ தொலைக்காட்சி கன்னடா |
266 | சீ கன்னடா |
268 | கஸ்தூரி தொலைக்காட்சி |
270 | ஏசியாநெட் சுவர்னா |
272 | டிடி சந்தனா |
274 | தொலைக்காட்சி 9 கன்னடா |
276 | சுவர்னா செய்திகள் |
இந்தி பொழுதுபோக்கு | |
302 | டிடி நேசனல் |
304 | கலர்ஸ் |
306 | ஸ்டார் ப்ளஸ் |
308 | சீ தொலைக்காட்சி |
310 | சோனி |
312 | சஹாரா |
316 | இமேஜின் தொலைக்காட்சி |
318 | லைப் ஓகே |
320 | சேப் தொலைக்காட்சி |
322 | ஸ்டார் உத்ஸவ் |
324 | ஜூம் |
326 | டிடி பாரதி |
இந்தி திரைப்படங்கள் | |
330 | செட் மேக்ஸ் |
332 | ஸ்டார் கோல்ட் |
334 | சஹாரா பிலிமி |
335 | யூதொலைக்காட்சி ஆக்சன் |
336 | ஜீ சினிமா |
338 | யூ தொலைக்காட்சி மூவீஸ் |
ஆங்கிலத் திரைப்படங்கள் | |
402 | ஹெச்பிஓ |
404 | ஸ்டார் மூவீஸ் |
406 | டபிள்யூபி |
408 | பிக்ஸ் |
410 | ஜீ ஸ்டுடியோ |
ஆங்கிலப் பொழுதுபோக்கு | |
452 | ஏ. எக்ஸ். என். |
454 | ஸ்டார் வோர்ல்டு |
456 | எப். எக்ஸ் |
458 | பாக்ஸ் கிரைம் |
460 | ஜீ கபே |
462 | பேஷன் தொலைக்காட்சி(இந்தியா) |
விளையாட்டுக்கள் | |
500 | ஈஎஸ்பிஎன் |
502 | ஸ்டார் ஸ்போர்ட்ஸ் |
506 | டென் ஸ்போர்ட்ஸ் |
508 | ஸ்டார் கிரிக்கெட் |
510 | டிடி ஸ்போர்ட்ஸ் |
512 | டென் ஆக்சன்+ |
514 | நியோ கிரிக்கெட் |
குழந்தைகளுக்கான சேவை | |
522 | டிஸ்னி அலைவரிசை |
524 | போகோ |
528 | கார்ட்டூன் நெட்வொர்க் |
530 | நிக் |
532 | ஹங்கமா |
534 | டிஸ்னி எக்ஸ். டி. |
536 | பேபி தொலைக்காட்சி |
தகவல் மற்றும் பொழுதுபோக்கு | |
540 | டிஸ்கவரி அலைவரிசை |
542 | நேசனல் ஜியோகிரபிக் அலைவரிசை |
544 | அனிமல் ப்ளேனட் |
546 | நேட் ஜியோ வைல்ட் |
547 | பாக்ஸ் ஹிஸ்டரி |
548 | டிடி க்யான் தர்ஷன் 1 |
செய்திகள் | |
550 | டிடி செய்திகள் |
552 | டைம்ஸ் நௌ |
554 | சி. என். என். ஐ. பி. என். |
556 | என். டி. டி. வி. |
558 | சி. என். பி. சி. டிவி. 18 |
562 | என். டி. டி. வி. ப்ரொஃபிட் |
566 | சி. என். என். |
568 | பி. பி. சி. வேர்ல்டு |
570 | என். டி. டி. வி. இந்தியா |
571 | ஸ்டார் செய்திகள் |
572 | ஆஜ் டக் |
574 | ஐ. பி. என். லோக்மத் |
576 | சி. என். பி. சி. ஆவாஸ் |
578 | லோக் சபா |
580 | ராஜ்ய சபா |
582 | பி. டி. சி. நியூஸ் |
584 | நியூஸ் லைவ் |
586 | இந்தியா தொலைக்காட்சி |
588 | என் டி டிவி ஹிந்து |
இசை | |
600 | அலைவரிசை [வி] |
602 | வி. எச். 1 |
604 | எம். டி. வி. |
606 | எம். எச். 1 |
608 | 9 எக்ஸ். எம். |
வட்டார அலைவரிசைகள் | |
620 | டிடி பங்க்ளா |
621 | ஜீ பங்க்ளா |
622 | இ டிவி பங்க்ளா |
623 | ஸ்டார் ஜல்சா |
625 | ஸ்டார் ஆனந்தா |
626 | ஆகாஷ் பங்க்ளா |
627 | சங்கீத் பங்க்ளா |
629 | இ டிவி ஒரியா |
630 | டிடி ஒரியா |
634 | ஒரிசா தொலைக்காட்சி |
638 | இ டிவி ராஜஸ்தான் |
640 | டிடி உருது |
642 | இ டிவி உருது |
650 | டிடி சஹ்யாத்ரி |
652 | இ டிவி மராத்தி |
655 | ஜீ மராத்தி |
656 | மி மராத்தி |
657 | ஜீ டாக்கீஸ் |
658 | ஸ்டார் மஜா |
660 | டிடி கிர்னார் |
661 | இ டிவி குஜராத்தி |
662 | டிவி 9 குஜராத்தி |
666 | பிடிசி பஞ்சாபி |
668 | பிடிசி செய்திகள் |
669 | இடிசி பஞ்சாபி |
670 | டிடி பஞ்சாபி |
675 | மஹுவா தொலைக்காட்சி |
680 | டிடி காஷிர் |
691 | டிடி நார்த் - ஈஸ்ட் |
693 | நேபால் 1 |
ஆன்மீகம் | |
700 | ஆஸ்தா |
34 | சாத்னா தொலைக்காட்சி |
702 | எஸ்விபிசி |
706 | ஷலோம் தொலைக்காட்சி |
708 | சன்ஸ்கார் |
710 | காட் தொலைக்காட்சி |
சர்வதேசம் | |
755 | ஆர் டி (ரஷ்யா இன்று) |
உரை வரையறுத்தல் | |
958 | ஐபிஎல் மேக்ஸ் உரை வரையறுத்தல் |
960 | சன் தொலைக்காட்சி உரை வரையறுத்தல் |
961 | கே தொலைக்காட்சி உரை வரையறுத்தல் |
962 | சன் மியூசிக் உரை வரையறுத்தல் |
964 | டிஸ்கவரி உரை வரையறுத்தல் வோர்ல்ட் |
966 | நேஷனல் ஜியோகிரபிக் உரை வரையறுத்தல் |
968 | மூவீஸ் நெள உரை வரையறுத்தல் |
970 | ஜெமினி தொலைக்காட்சி உரை வரையறுத்தல் |
978 | டிடி உரை வரையறுத்தல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.