சந்திரவல்லி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சந்திரவல்லி (Chandravalli) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள சித்திரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் தளமாகும். [1] இப்பகுதி சித்ரதுர்கா, கிராபனக்கல்லு, ஜோலாகுட்டா ஆகிய மூன்று மலைகளால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்காகும். [2] ஒரு அரை வறண்ட பகுதியான இங்கே, புதர்க்காடுகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. [3] சந்திரவல்லியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் விஜயநகரப் பேரரசு, சாதவாகனர் மற்றும் போசளப் பேரரசு போன்ற இந்திய வம்சங்களின் மண் பானைகளும், வர்ணம் பூசப்பட்ட கிண்ணங்களும், நாணயங்களும், உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் சீசரின் வெள்ளி நாணயங்களும், கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆன் வம்சத்தின் பேரரசர் வூ டியின் நாணயமும் கிடைத்துள்ளன. [4]
சந்திரவல்லி | |
---|---|
சந்திரவல்லி | |
இருப்பிடம் | சித்ரதுர்கா, கருநாடகம், இந்தியா |
ஆயத்தொலைகள் | 14°12′32″N 76°23′10″E |
வகை | குடியேற்றப் பகுதி |
நீளம் | 730 m (2,400 அடி) |
அகலம் | 730 m (2,400 அடி) |
பரப்பளவு | 53.3 ha (132 ஏக்கர்கள்) |
வரலாறு | |
காலம் | சாதவாகனர் |
சந்திரவல்லி (சந்திரனின் வடிவம்) சந்தனாவதி என்று அழைக்கப்பட்டது. இந்த இடம் ஒரு காலத்தில் சந்திரஹாசன் (குந்தலா மன்னன்) என்பவன் ஆட்சி செய்ததால் மன்னனின் பெயர் இதற்கு வந்திருக்கலாம்.
சந்திரவல்லி குகைக் கோயில் ( அங்காலி மடம் - அங்காலகியில் இருந்து முனிவர்கள் (பெல்காம்) தியானத்திற்காக இங்கு வந்தனர்) [5] அரை இருமுனை வடிவத்தில் இரண்டு மாபெரும் ஒரு பாறைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தளம் சித்ரதுர்காவிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் உள்ளது. குகைக் கோயிலுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் ஒரு ஏரி ஒன்றும் இங்குள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள காடுகளில் பறவைகளைப் பார்ப்பதற்கான ஒரு சிறந்த இடமாகும்.
சந்திரவல்லியின் பைரவேசுவரர் கோயிலில் முதல் கன்னட வம்சமான கதம்ப வம்சத்தை நிறுவிய மயூரசர்மா (பொ.ச. 345) என்பவனின் பாறை கல்வெட்டு உள்ளது.
சந்திரவல்லி வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருள் தளமாக இருக்கிறது. வரலாற்றாசிரியர்கள், வரலாற்றுக்கு முந்தைய மற்றும் சாதவாகனர்கள் காலத்திலிருந்து வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள், நாணயங்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும், இரும்புக் காலத்தில் மனித வாழ்விடம் இங்கு இருந்ததையும் கண்டறிந்தனர்.
1909 ஆம் ஆண்டில் பி.எல் ரைஸ், ஆர் நரசிம்மச்சார், ஆர். சாமா சாத்திரி ஆகியோர் இங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டனர். 1929-30 காலகட்டத்தில் எம்.எச். கிருட்டிணர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். [6]
மைசூர் மாநில தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறையின் இயக்குநராக இருந்த ஆர். நரசிம்மச்சார் என்பவர் சந்திரவல்லியை முதலில் தோண்டினார். [2] [7] மேலும், அகழ்வாராய்ச்சிகள் எச். எம். கிருட்டிணாவால் 1928-29லும், இறுதியாக மோர்டிமர் வீலர் என்பவரால் 1947லும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன
இரண்டு தனித்துவமான கால அகழ்வாராய்ச்சிகளின் போது பெருங்கற்காலத்தின் எச்சங்களும் , சாதவாகனர்கள் காலமும் கவனிக்கப்பட்டன. இரும்புக் காலத்திலிருந்து சந்திரவல்லியில் மக்கள் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலுள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள் சாளுக்கியர் மற்றும் போசளர்கள் காலத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்று கதம்ப வம்சத்தின் நிறுவனர் மயூரசர்மன் என்ற மன்னனுக்கு சொந்தமானது. [2]
மூன்றாம் கிருட்டிணராச உடையார், மைசூர், கிருஷ்ணதேவராயன், விஜயநகர ஆட்சியாளர்கள் , பல்வேறு சாதவாகன ஆட்சியாளர்கள், போசள வீரராயன் போன்றோரின் நாணயங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வெளிநாட்டு நாணயங்கள் பலவும் கண்டறியப்பட்டது. அதில், அகஸ்டஸ் சீசரின் வெள்ளி நாணயம், சீனாவின் ஆன் வம்சத்தின் பேரரசர் வூ டியின் நாணயம் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. [2]
வரலாற்று குடியேற்றத்தின் மதிப்பீடு பண்டைய உரோமானியப் பேரரசுடன் வணிக தொடர்புகள் இருப்பதைப் பற்றிய சுவாரசியமான கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்தது. [8]
கண்டுபிடிக்கப்பட்ட பிற பொருட்களில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கல்பதுக்கைகள், எலும்புகள், விலங்குகளின் பற்கள், ஒரு உரோமானிய புல்லா (கழுத்தணி) ஆகியவை இருந்தன. கிடைத்த கல்பதுக்கைகளின் ஒன்று கல் சவப்பெட்டியாகும்.]] [2]
Seamless Wikipedia browsing. On steroids.