From Wikipedia, the free encyclopedia
சந்திரகுப்த சாணக்யா ஒரு இந்திய வரலாற்றுத் தமிழ் திரைப்படமாகும். 1940ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எஸ். சி. சாச்சி (எஸ். சி. சதாசிவம்) இயக்கியிருந்தார். பவானி கே. சாம்பமூர்த்தி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1][2]
சந்திரகுப்த சாணக்யா | |
---|---|
இளவரசி 'சாயா'வாக என். சி. வசந்தகோகிலம் | |
இயக்கம் | சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்) |
தயாரிப்பு | சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்) |
மூலக்கதை | சந்திரகுப்த மௌரியர் வரலாறு |
திரைக்கதை | சி. கே. சாச்சி (சி. கே. சதாசிவம்) |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | பவானி கே. சாம்பமூர்த்தி என். சி. வசந்தகோகிலம் ப்ரஹதாம்பாள் டி. கே. கல்யாணம் எஸ். எஸ். கொக்கோ பி. சாரதாம்பாள் |
ஒளிப்பதிவு | எஸ். தாஸ் |
கலையகம் | ட்ரினிட்டி தியேட்டர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 24, 1940 (இந்தியா) --> |
ஓட்டம் | 14,000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மௌரிய பேரரசைத் தோற்றுவித்தவர் சந்திரகுப்தர். அவரது ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அர்த்தசாஸ்திரம் என்னும் அரசியல் நூலை எழுதிய கௌடில்யர் தான் சாணக்கியர் என பாரம்பரியமாக சொல்லப்படுகிறது. இவர்களின் வரலாறே இந்தத் திரைப்படமாகும் [1]
பவானி கே. சாம்பமூர்த்தி
என். சி. வசந்தகோகிலம்
ப்ரஹதாம்பாள்
டி. கே. கல்யாணம்
எஸ். எஸ். கொக்கோ
பி. சாரதாம்பாள்[1]
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பாபநாசம் சிவன். கருநாடக இசை பாடகியாகவும் விளங்கிய என். சி. வசந்தகோகிலம் சில பாடல்களைப் பாடினார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.