பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
சக்வால் மாவட்டம் (Chakwal District) (உருது: ضِلع چکوال) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கில் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சக்வால் நகரம் ஆகும்.
சக்வால் மாவட்டம்
چکوال | |
---|---|
மாவட்டம் | |
வடக்கு பஞ்சாபில் சக்வால் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பஞ்சாப் மாகாணம் |
தலைமையிடம் | சக்வால் நகரம் |
தாலுக்காக்கள் 5 | பட்டியல்
|
அரசு | |
• மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் | முகமது பட்டி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,524 km2 (2,519 sq mi) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 10,83,725 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இம்மாவட்டம் ஜீலம் மாவட்டம் மற்றும் அட்டோக் மாவட்டங்களின் சில தாலுக்காக்களைக் கொண்டு 1985-இல் துவக்கப்பட்டது.[2]
6,524 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின்[3][4] நிர்வாக வசதிக்காக சக்வால், கல்லர், சோவா சைதான் ஷா, தலாகாங் மற்றும் லாவா என ஐந்து தாலுக்காகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், ஒரு மாவட்ட வளர்ச்சி குழுவும், 68 கிராம ஒன்றியக் குழுக்களும், 198 வருவாய் கிராமங்களும், 11 காவல் நிலையங்களும் உள்ளது.
இம்மாவட்டம் இரண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகளையும், நான்கு பஞ்சாப் மாகாண சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
6,524 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சக்வால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 10,83,725 ஆகும். மொத்த மக்களில் நகரப்புறங்களில் 21.01% மக்கள் வாழ்கின்றனர்.[5] சராசரி எழுத்தறிவு விகிதம் 56.72% ஆக உள்ளது.[6] இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 97.7% மக்களும் பஷ்தூ மொழியை 1.2% மக்களும், உருது மொழியை 0.9% மக்களும் பேசுகின்றனர்.
சக்வால் மாவட்டத்தில் உள்ள 1199 அரசுப் பள்ளிகளில் 627 பள்ளிகள் பெண்களுக்கானது.[7]
இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. இங்கு வற்றாத ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. இங்கு கோதுமை, கரும்பு, பார்லி, பயறு வகைகள், சோளம், சிறு தானியங்கள் பயிரிடப்படுகிறது. மேலும் இங்கு பெரிய சிமெண்ட் ஆலையும் உள்ளது.
இம்மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நூறு கோயில்கள் கட்டாஸ் ராஜ் எனும் பகுதியில் உள்ளது. இக்கோயிலுக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். மேலும் கட்டாஸ் ராஜ் பகுதியில் தொன்மையான சமசுகிருத பல்கலைக்கழகம் இருந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.