From Wikipedia, the free encyclopedia
சக்தி விகடன் விகடன் குழுமத்தில் இருந்து, மாதம் இருமுறை வெளியாகும் ஆன்மிக இதழ். புராண- இதிகாசங்கள், ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள், மகான்களின் வரலாறு, திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் என ஆன்மிகம் மற்றும் அதுசார்ந்த அற விஷயங்களைத் தாங்கி வரும் சக்திவிகடனின் முதல் இதழ், தாரண வருடப் பிறப்பன்று, (இதழ் தேதி: 19.4.2004) வெளியானது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
N. Raviprakash | |
வகை | Spiritual |
---|---|
இடைவெளி | Fortnightly |
வெளியீட்டாளர் | Raviprakash |
முதல் வெளியீடு | Apr 2004 |
நிறுவனம் | Vasan Publications Pvt. Ltd. |
நாடு | India |
அமைவிடம் | Chennai |
மொழி | Tamil |
வலைத்தளம் | www |
மாதமிருமுறை ஆன்மிக இதழான சக்திவிகடன், ஆரம்பத்தில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி சில ஆண்டு காலம் வரை பிரதோச தினங்களிலும் வெளியானது. பின்னர், 16.11.10 தேதியிட்ட இதழிலிருந்து ஒன்றுவிட்ட செவ்வாய்க்கிழமைகளில் வெளியாகிறது.
முறையான பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் கிடக்கும் புராதனமான ஆலயங்கள் குறித்துக் கட்டுரைகள் வெளியிட்டு, அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, திருப்பணிக்குழுக்கள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்போடு அந்த ஆலயங்களைச் சீர்படுத்தி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உதவி வருகிறது[1]
முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் ஆன்மிகத்தை அறிந்து, நாட்டம் கொள்ளும் வகையில் ஆன்மிகம் சார்ந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களுக்கு ஒழுக்க நெறிகளை ஊட்டி அற வழியில் செலுத்தி வருகிறது [2]
ஆன்மிகம் தொடர்பான ஐயங்களைத் தகுந்த பதில்கள், விளக்கங்கள் மூலம் போக்கி வாசகர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது [3].
சக்தி விகடனின் ஆரம்ப இதழ் முதல் 24.7.06 தேதியிட்ட இதழ் வரையில், தொடர்ந்து 32 பக்க இணைப்பிதழ் வெளியானது. முதலில் ஜோதிட பலன்களாக வெளிவந்த இந்த இணைப்பிதழில், அடுத்தடுத்து மகான்களின் திவ்விய வரலாறுகளும் இடம்பெற்றன. பின்னர், தமிழ் மாத விசேஷங்கள் குறித்த தொகுப்பாக வெளியானது இந்த இணைப்பிதழ்.
தற்போது ஜோதிடத் தகவல்கள், ராசிபலன்கள், வாஸ்து, எண் கணிதம் மற்றும் கைரேகை சாஸ்திரம் குறித்த கட்டுரைகளுடன் 16 பக்க இணைப்பிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. 'சக்தி ஜோதிடம்'.
இவை தவிர, நவராத்திரி போன்ற சிறப்பு விழா நாட்கள், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, வருடப் பிறப்பு போன்ற தருணங்களில் சிறப்பு இணைப்பிதழ்களும் வெளியாகின்றன.
2012-ம் வருடம் முதல், ஆங்கில வருடப் பிறப்பையொட்டி, தினசரி காலண்டரும் சக்திவிகடனோடு இணைப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2013-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியான ஜய வருட (2014-2015) பஞ்சாங்கம் இணைப்பிதழாகக் கொடுக்கப்பட்டது. இது சக்தி விகடனின் புதிய முயற்சி. பாமரர்களும் எளிதில் புரிந்து, பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த கவனமுடன் நுணுக்கமாகவும் இருப்பது இதன் சிறப்பு!
பஞ்சாங்கத்தை டிஜிட்டல் வடிவிலும் சக்தி விகடன் வழங்கி வருகிறது. www
இணைப்புப் புத்தகங்கள் தவிர, சிறப்பு விழாக்கள் மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு, வாசகர்கள் வழிபட்டுப் பயனடையும் விதமாக ஸ்வாமி வண்ணப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர்களும் அவ்வப்போது தரப்படுகின்றன.
இணைய தளம், ஃபேஸ்புக் www
சமயம் சார்ந்த களப்பணியிலும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது சக்திவிகடன்.
மாதம் இருமுறை, பெண்களுக்கென திருவிளக்கு பூஜைகளை [4] நடத்தி வருகிறது சக்தி விகடன். தவிர, உலக நன்மைக்காகவும் வாசகர்களின் மேன்மைக்காகவும் சபரிமலை முதலான பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ ஹோமங்கள் நடத்தி, வாசகர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதங்கள் அளிப்பது, மஹாளய பட்ச அமாவாசையில் முன்னோர் ஆராதனை [5] நடத்தி வைப்பது என இதன் ஆன்மிகச் செயல்பாடுகள் பல!
இன்றைய வாழ்க்கைச் சூழலில் இளையோர் முதல் முதியோர் வரையில், அவர்கள்தம் உடலும் உள்ளமும் பேணும் வகையில், 'வாழ்க வளமுடன்' அமைப்பினருடன் இணைந்து, தமிழகமெங்கும் உள்ள அவர்களுடைய மையங்களில் வாசகர்களுக்கு இலவசமாக அடிப்படை யோகா பயிற்சிகளை வழங்கியது சக்தி விகடன்.[6]
2012-ம் ஆண்டு, 'தானே' புயலில் சிக்கித் தவித்த கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதி மக்களின் துயர் துடைக்கும் பணியில் சக்திவிகடனும் பங்கேற்றது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி- பள்ளி மாணவர்களை ஒன்றுதிரட்டி, ஆன்றோர்கள் மூலம் அவர்களுக்குத் தன்னம்பிக்கை புத்துணர்வு முகாமை நடத்தியது சக்திவிகடன்.
ஆன்மிகத் தொண்டுக்கென்றே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு சேவை செய்யும் அன்பர்களையும் [7], உழவாரப் பணி போன்று இறைப்பணியில் ஈடுபடுவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் சக்திவிகடனின் அதீத பங்களிப்பு உண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.