From Wikipedia, the free encyclopedia
வீரசிங்கம் கணேசசங்கரி யோகசங்கரி (Veerasingam Ganeshasangari Yogasangari, இறப்பு: 19 சூன் 1990) இலங்கைத் தமிழ்ப் போராளியும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
கணேசசங்கரி யோகசங்கரி G. Yogasangari | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் | |
பதவியில் 1989–1990 | |
பின்னவர் | கே. சிறிநிவாசன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | கோடம்பாக்கம், சென்னை, இந்தியா | 19 சூன் 1990
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரியின் சகோதரரான வி. கணேசசங்கரி என்பவரின் மகன் யோகசங்கரி ஆவார்.[1]
யோகசங்கரி 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2]
யோகசங்கரியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் 1990 சூன் 19 இல் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3][4] இப்படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[5][6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.