From Wikipedia, the free encyclopedia
கௌரி கிருபானந்தன் (ஆங்கில மொழி: Gowri Kirubanandan) தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்து வருபவர்.[1]
இவர் செப்டம்பர் 2, 1956ல் திண்டுக்கல்லில், கிருஷ்ணமூர்த்தி ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் பணியாற்றியதால் இவரது பள்ளி கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 18 ஆண்டுகளாகத் தனக்குப் பிடித்த நாவல்களை, சிறுகதைகளைத் தமிழிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்து வருகிறார். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறுகதை, நாவல்களை அனுமதி பெற்று மொழிபெயர்த்தார். அவரது புகழ்பெற்ற ‘அந்தர்முகம்’ நாவலை இவர் மொழிபெயர்க்க, பிரபல அல்லயன்ஸ் பதிப்பகம் அதனை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. ஆந்திராவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் போராளியான கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் வரலாற்றை ‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
1.தளபதி 2.பிரளயம் 3.லேடீஸ் ஹாஸ்டல் 4.ரிஷி 5.தூக்குத் தண்டனை 6.பணம் மைனஸ் பணம் 7.துளசி தளம் 8.மீண்டும் துளசி
போன்றவற்றைத் தமிழ் வாசகர்கள் பரவலாக அறிய இவர் காரணமானார்.
தெலுங்கு இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளரும், ‘நாவல் ராணி’ என்று போற்றப்படுபவருமான யத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். அவை 1.சங்கமம் 2.மௌன ராகம் 3.நிவேதிதா 4.சம்யுக்தா 5.தொடுவானம்
1.மானவி 2.சுஜாதா 3.மீட்சி
அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, வாசந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி எனப் பலரது படைப்புகளை வழங்கியிருக்கிறார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.