கோ 2 (KO 2) என்பது 2016ம் ஆண்டு சரத் மாண்டவா இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி அரசியல் திரைப்படம் ஆகும். இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார், இதில் பாபி சிம்ஹா மற்றும் நிக்கி கல்ரானி நடித்துள்ளனர், அதே நேரத்தில் பிரகாஷ் ராஜ் தனது முதல் படத்திலிருந்து மீண்டும் நடிக்க,[1] பாலா சரவணன், இளவரசு, ஜான் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

விரைவான உண்மைகள் கோ 2, இயக்கம் ...
கோ 2
இயக்கம்சரத் மாண்டவா
தயாரிப்புஎல்ரெட் குமார்
ஜெயராமன்
கதைபாக்கியம் சங்கர் (உரையாடல்கள்)
ராஜா ராம் (உரையாடல்கள்)
திரைக்கதைசரத் மாண்டவா
இசைலியோன் ஜேம்ஸ்
நடிப்புபாபி சிம்ஹா
பிரகாஷ் ராஜ்
நிக்கி கல்ரானி
ஒளிப்பதிவுபிலிப் ஆர் சுந்தர்
வெங்கட் எம்.
படத்தொகுப்புரிச்சர்ட் கெவின்
கலையகம்ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்
வெளியீடுமே 13, 2016 (2016-05-13)(இந்தியா)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

அரசியலைத் தவறாகப் பயன்படுத்தும் ஒருவரை ஊடகத்தில் உள்ள ஒருவர் தண்டிப்பது இதன் மையக் கரு. இப்படம் 2014 ஆம் ஆண்டு ரோஹித் நடிப்பில் வெளியான 'பிரதிநிதி' என்ற தெலுங்கு மொழி படத்தின் மறு ஆக்கம் ஆகும். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிகரமான திரைப்படமான கோ படத்தின் தொடர்ச்சியாக ஏப்ரல் 2016 இல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் 13 மே 2016 அன்று வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

சாமானிய மனிதனான குமரன்(பாபி சிம்ஹா) தமிழ்நாட்டின் முதலமைச்சரான யோகேஸ்வரனை (பிரகாஷ் ராஜ்) கடத்திவிடுகின்றார். இதனை விசாரிக்க உள்துறை அமைச்சரான தில்லைநாயகம்(இளவரசு) ஆய்வாளர் சந்தனபாண்டியனை (ஜான் விஜய்) நியமிக்கின்றார். சமூக சேவகரான குமாரசாமி (நாசர்), மற்றும் அவரது மகனையும் தன் அரசியல் சுயலாபத்திற்காக கொலை செய்த தில்லைநாயகத்தை பலிவாங்க முதலமைச்சரைக் கடத்துகிறார். மந்திரி மகன் பாலா (பாலா சரவணன்) உதவியுடன் தமிழக முதல்வர் பிரகாஷ்ராஜை கடத்தி வைத்துக் கொண்டு , தன் கோரிக்கைகளை காவல் அதிகாரிகளிடம் வைக்கிறார். முதல்வரை மீட்கும் பொறுப்பு போலீஸிடமிருந்து என்.எஸ்.ஜி. கைக்கு மாறுகிறது. பின் இவரது கோரிக்கைகள் நிறைவேறியதா என்பது மீதிக் கதை.

நடிகர்கள்

விமர்சனம்

  • சமயம் - "கோ ''அளவிற்கு ரசிகனை "கோ - 2'' வும் கொண்டாட வைக்கிறது.
  • தினமலர் - "கோ ''அளவிற்கு ரசிகனை "கோ - 2'' ஓடும் திரையரங்குக்கு கோ டூ என கொண்டு வருவது நிச்சயம்.
  • தி இந்து - பாபி சிம்ஹா கதாபாத்திரத்திலும் மேலும் மெனக்கெட்டிருந்தால் ‘கோ 2’ இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்டையைக் கிளப்பியிருக்கும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.