Remove ads
From Wikipedia, the free encyclopedia
கோரேகாவ் போர் (Battle of Koregaon) என்பது 1881 சனவரி 1 அன்று பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் மராத்தியப் பேரரசின் பேஷ்வாவின் படைகளுக்கு இடையில் கோரேகான் பீமா என்ற இடத்தில் நடந்த போரைக் குறிப்பது ஆகும். இந்தப் போரில் பிரித்தானியப் படையின் சார்பில் போரிட்ட வீரர்களில் மராத்திய தலித்துகளான மஹர் இனத்தவர் பெரும்பான்மையாக இருந்தனர்.
|
||||||||||||||||||||||||||||||||||||||
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தலைமையில் 28 ஆயிரம் மராட்டியர்களைக் கொண்ட படையைக் கொண்டு புனேயை தாக்க முற்பட்டார். தாக்க செல்லும் வழியில், 800 படை வீரர்களைக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் படைப்பிரிவு ஒன்றை அவர்கள் எதிர்கொண்டனர். அது புனேயில் பிரித்தானிய துருப்புக்களின் வலிமையை அதிகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தது. கோரேகாவில் இருந்த கிழக்கிந்திய படையுடன் சண்டையிடுவதற்காக பேஷ்வா தன்னுடைய இரண்டு ஆயிரம் படைவீரர்கள் கொண்ட பிரிவையும் அனுப்பினார். கேப்டன் பிரான்சிஸ் ஸ்டாண்டனின் தலைமையின் கீழ், கிழக்கு இந்திய கம்பனியின் இந்த குழு கிட்டத்தட்ட 12 மணி நேரம் பேஷ்வாவின் படைகளை எதிர்கொண்டது. ஒரு பெரிய பிரித்தானிய படை உதவிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் வெற்றி எளிதாக இருக்காது என்று அஞ்சிய பேஷ்வாவின் படை பின்வாங்கிச் சென்றது.
அந்தப் போர் வெற்றியின் நினைவாக ஆங்கிலேயர்களால் கோரேகாவ் பீமாவில் வெற்றித் தூண் நிறுவப்பட்டது. வெற்றித் தூணில் போரில் கொல்லப்பட்ட 49 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டன. இதில் 22 பேர் மஹர் தலித் வீரர்களின் பெயரும் அடங்கும்.
இந்தப் போர் வெற்றியை உயர் ஜாதி பேஷ்வாக்களின் மீதான தங்களின் வெற்றியின் ஒரு அடையாளமாகவும் தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் சனவரி 1ஆம் தேதி, அந்த நினைவிடத்துக்குச் சென்று, மஹார் இன மக்கள் கொண்டாடுகின்றனர்.[2] 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி, பீமா கோரேகாவ் போர் வெற்றியின் 200வது ஆண்டு நினைவு நாளன்று அஞ்சலி செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பகுஜன் படைகள் மற்றும் பிராமணிய சக்திகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. வன்முறை வெடித்தது, ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.