From Wikipedia, the free encyclopedia
கோபி கலை அறிவியல் கல்லூரி தமிழ் நாட்டில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். ஆண், பெண் இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரி அரசு உதவி பெறும் & உதவிபெறாப் பிரிவுகள் என இரண்டு பகுதிகளாக இயங்கி வருகிறது. கோபி பகுதிவாழ் மக்களுக்காகவும் அதன் சுற்றுப்புறக் கிராமமக்களின் மேற்படிப்பிற்காகவும் 1968 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரிக்கு 1987 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. இது பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கு பதினெட்டு இளங்கலைப் படிப்புகளும்,பதினாறு முதுகலைப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இக்கல்லூரி 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
இக்கல்லூரி கோபி பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.