கோஏர் என்ற பெயரில் நிறுவப்பட்ட கோ பர்ஸ்ட் (Go First), குறைந்த கட்டணத்துடன் செயல்படக்கூடிய இந்திய விமான சேவையாகும். இது மும்பையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது.[2] இந்த சேவையானது டிசம்பர் 2005 முதல் செயல்படத் தொடங்கியது. ஜனவரி 2014 ன் படி, இது இந்தியாவின் மிகப்பெரிய விமானசேவையின் பங்குச்சந்தை அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.[3] இது உள் நாட்டு பயணிகளுக்கான சேவையினை 21 நகரங்களுக்கு செயல்படுத்தியது. இதற்காக தினமும் 100 விமானங்களும், வாரத்திற்கு சுமார் 750 விமானங்களும் இயக்கப்பட்டன.[4] இதற்கான மையங்கள் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் [5] (மும்பை) மற்றும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் (புது டெல்லி) ஆகிய இடங்களில் இருந்தன.

விரைவான உண்மைகள் IATA, ICAO ...
கோ பர்ஸ்ட்
Thumb
IATA ICAO அழைப்புக் குறியீடு
G8 GOW GO AIR
நிறுவல்2005
செயற்பாடு துவக்கம்நவம்பர் 2005
செயற்பாடு நிறுத்தம்3 மே 2023 (2023-05-03) (தற்காலிகமாக)[1]
மையங்கள்
  • சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையம் (மும்பை)
இரண்டாம் நிலை மையங்கள்
  • இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம் (தில்லி)
கவன செலுத்தல் மாநகரங்கள்
  • கெம்பெகவுடா பன்னாட்டு விமான நிலையம் (பெங்களூரு)
  • ஸ்ரீநகர் விமான நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்GoClub
வானூர்தி எண்ணிக்கை18
சேரிடங்கள்21
தாய் நிறுவனம்வாடியா குழுமம்
தலைமையிடம்Worli, மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முக்கிய நபர்கள்ஜஹாங்கிர் வாடியா (மேலாண்மை இயக்குநர்)
Giorgio De Roni (CEO)
பயனடைIncrease 104.34 மில்லியன் (US$1.3 மில்லியன்) (2013)
வலைத்தளம்www.goair.in
மூடு

2020 மார்ச்சில், வானூர்தி நிறுவனம் மும்பை, தில்லி, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத், சண்டிகர்,[6] கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து 27 உள்நாட்டு மற்றும் ஒன்பது சர்வதேச இடங்கள் உட்பட 36 இடங்களுக்கு தினசரி 330 வானூர்திகளை இயக்கியது.[7][8] முதன்மைச் சந்தையில் இருந்து ரூ. 36 பில்லியனைத் திரட்டுவதற்காக, ஐபிஓ[9] தொடங்குவதற்கு ஏர்லைன் திட்டமிட்டிருந்தது. மேலும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திட்டம் டிஆர்ஹெச்பியை தாக்கல் செய்தது.[10] இந்த வானூர்தி நிறுவனம் அதன் வானூர்திகளுக்கான எஞ்சின்களை அமெரிக்கவைச் சேர்ந்த பாராட் அண்ட் விட்னி (பிடபிள்யூ) நிறுவனத்திடம் வாங்கி வந்தது. சில ஆண்டுகளாக அவற்றின் எஞ்சின்கள் சில பழுதடைந்து வந்துள்ளன. மாற்று எஞ்சின்களை வழங்குவதில் பிடபிள்யூ நிறுவனம் தாமதம் செய்து வந்தது. இதனால் தங்கள் வானூர்தி சேவையை குறைக்கவேண்டிய கட்டாயத்துக்கு கோ பர்ஸ்ட் ஆளானது. இந்த சிக்கல்கள் காரணமாக, 3 மே 2023 அன்று வானூர்தி நிறுவனம் அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியது. பின்னர் வழியின்றி நிறுவனம் திவால் நடவடிக்கைகளுக்காக விண்ணப்பித்துள்ளது.[1][11]

வரலாறு

கோஏர், ஜஹாங்கிர் வாடியாவால் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜஹாங்கிர் வாடியா இந்திய தொழிலதிபரான நஸ்லி வாடியாவின் இளைய மகன் ஆவார். கோஏர் முழுவதும் வாடியா குழுமத்திற்கு சொந்தமானது ஆகும். ஜஹாங்கிர் வாடியா இதன் நிர்வாக இயக்குனர் ஆவார். இது ஏர்பஸ் 320 யின் உதவியுடன் நவம்பர் 2005 ல் முதன் முறையாக செயல்படத் தொடங்கியது.[12]

ஜனவரி 2007 லிருந்து, கோஏர் சராசரியாக 86% பளுக்காரணியைக் கொண்டுள்ளது.[12] ஆனால் இதன் வளர்ச்சி, அதே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மற்ற நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. இருப்பினும் வாடியா மற்றும் கோஏரின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனியின் கருத்துப்படி, கோஏர் மெதுவாக வளர்ச்சி கண்டு வருவது நிறுவனத்தின் யுக்திகளில் ஒன்று, மேலும் நிறுவனம் மற்ற காரணிகளை கருத்தில் கொள்வதைவிட அதன் நிகரலாபத்திலேயே தனது கவனத்தை செலுத்துவதாக தெரிந்தது.[13][14]

ஏப்ரல் 2012 ல், கிங்க்ஃபிஷர் நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் , கோஏர் நிறுவனம் பங்குச்சந்தை அடிப்படையில் ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்தது. இருப்பினும் ஜனவரி 2014 ன் படி இது குறைந்த சந்தை பங்குகளையே (8.8%) கொண்டது.[3]

இதன் முதல் விமானம் ஏப்ரல் 29,2005 அன்று திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்டது. குறைந்த கட்டணத்துடன் வழங்கப்படக்கூடிய விமான சேவையில் இதுவும் ஒன்று, மேலும் நாட்டின் முதன்மையான விமான சேவைகளில் இது முக்கியமானதாக இருந்தது.[15]

இடங்கள்

கோஏர் நிறுவனம் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களையும் வாரத்திற்கு சுமார் 750 க்கும் [4] மேற்பட்ட விமானங்களையும் இயக்குவதன் மூலம் 21 நகரங்களுக்கு தனது சேவையினை வழங்குகியது. இந்திய அரசாங்கம் மற்றும் உள்நாட்டு விமான அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி சிறிய விமான குழுக்கள் வைத்துள்ள கோஏர் நிறுவனத்திற்கு சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.

  • அந்தமான் நிக்கோபார் தீவுகள்
    • போர்ட் பிளேர் – வீர சாவர்கர் விமான நிலையம்
  • அசாம்
    • குவஹாத்தி – லோக்பிரியா கோபிநாத் பர்டோலி சர்வதேச விமான நிலையம்
  • பீஹார்
    • பாட்னா – லோக் நாயக் ஜெயபிரகாஷ் விமான நிலையம்
  • சண்டிகர்
    • சண்டிகர் விமான நிலையம்
  • டெல்லி
    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (மையம்)
  • கோவா
    • தபோலிம் விமான நிலையம்
  • குஜராத்
    • அகமதபாத் – சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
    • ஜம்மு – ஜம்மு விமான நிலையம்
    • ஸ்ரீநகர் - ஸ்ரீநகர் விமான நிலையம்
    • லே – லே குஷக் பகுலா ரிம்போச்சி விமான நிலையம்
  • ஜார்கண்ட்
    • ராஞ்சி – பிர்ஸா முண்டா விமான நிலையம்
  • கர்நாடகா
    • பெங்களூர் – கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
  • கேரளா
    • கொச்சி – கொச்சி சர்வதேச விமான நிலையம்
  • மஹாராஷ்டிரா
    • மும்பை – சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
    • நாக்பூர் – டாக்டர். பாபாசாஹிப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம்
    • புனே – புனே சர்வதேச விமான நிலையம்
  • ராஜஸ்தான்
    • ஜெய்பூர் - சங்கனீர் விமான நிலையம்
  • தமிழ்நாடு
    • சென்னை – சென்னை சர்வதேச விமான நிலையம்
  • உத்திர பிரதேசம்
    • லக்னோ – அமௌசி விமான நிலையம்
  • மேற்கு வங்காளம்
    • சிலிகிரி – பாக்தோகிறா விமான நிலையம்
    • கொல்கத்தா – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்

விமான குழுக்கள்

செயல்பாட்டு பழுவினைக் குறைப்பதற்காக கோஏர் 180 பயணிகளை மட்டுமே கொண்டு இயங்கக் கூடிய ஏர்பஸ் 320-200 விமானங்களை மட்டுமே கொண்டிருந்தது. அதன் பின்பு இதன் செயல்பாடு ஆரம்பித்த பின்னர் ஏர்பஸ் 320 வகையில் இருபது விமானங்களை அதிகமாக வாங்கி செயல்படுத்தியது. பிப்ரவரி 2014 ன் படி, கோஏர் இதுபோன்ற 15 விமானங்களை செயல்படுத்துவதாகவும் அதன் சராசரி குழுவயது 3.1 ஆண்டுகள் எனவும் கணக்கிடப்பட்டது.

விருதுகள்

கோஏர் பினவரும் விருதுகளைப் பெற்றுள்ளது:

தரம் மற்றும் சிறந்த உள்நாட்டின் விமான சேவைக்கான விருதினை பசிபிக் ஏரியா டிராவல் ரைட்டர்ஸ் அசோஸியேஷன் 2008 ஆம் ஆண்டு வழங்கியது. சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை ஏர்பஸ் 2011 ஆம் ஆண்டு வழங்கியது.

குறிப்புகள்:

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.