From Wikipedia, the free encyclopedia
கொரிய மக்கள் இராணுவம் (கொரிய மொழி: 조선인민군), பொதுவாக வடகொரியாவில் இன்மின் கன் அறியப்படுவது (தமிழ்: மக்கள் இராணுவம்), ஆனது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் ஒருங்கிணைந்த ஆயுதப்படைகள் ஆகும். டிசம்பர் 2011 வரை, கிம் ஜோங்-இல் கொரிய மக்கள் இராணுவத்தின் உச்ச படைத்தலவைராகவும், தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார். கொரிய மக்கள் இராணுவம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவையாவன (I) கொரிய மக்கள் இராணுவ தரைப்படை, (II) கொரிய மக்கள் கடற்படை, (III) கொரிய மக்கள் வான்படை, (IV) வியூக ஏவுகணைப் படை, (V) வட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை.
கொரிய மக்கள் இராணுவம் | |
---|---|
조선인민군 (tr.: Chosŏn inmin'gun) | |
கொரிய மக்கள் இராணுவத்தின் கொடி | |
நிறுவப்பட்டது | ஏப்ரல் 25, 1932[1] |
தற்போதைய வடிவம் | பெப்ரவரி 8, 1948 |
சேவை கிளைகள் | கொரிய மக்கள் இராணுவத் தரைப்படை கொரிய மக்கள் கடற்படை கொரிய மக்கள் வான்படை வியூக ஏவுகணைப் படைகள் வட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை |
தலைமையகம் | Pyongyang, வட கொரியா |
தலைமைத்துவம் | |
Supreme Commander of the Korean People's Army | கிம் ஜோங்-உன் |
மக்கள் ஆயுதப் படைகள் அமைச்சர் | Vice Marshal கிம் யாங்-சுன் |
Chief of the General Staff | Vice Marshal ரீ யாங்-ஹோ |
ஆட்பலம் | |
கட்டாயச் சேர்ப்பு | 17 years of age |
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 6,515,279 ஆண்கள், வயது 17-49 (2010 est.), 6,418,693 பெண்கள், வயது 17-49 (2010 est.) |
படைச்சேவைக்கு ஏற்றவர் | 4,836,567 ஆண்கள், வயது 17-49 (2010 est.), 5,230,137 பெண்கள், வயது 17-49 (2010 est.) |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 207,737 ஆண்கள் (2010 est.), 204,553 பெண்கள் (2010 est.) |
பணியிலிருப்போர் | 1,106,000 (ranked 4th)[2] (2010) |
இருப்புப் பணியாளர் | 8,200,000 (2012) (ranked 1st) |
செலவுகள் | |
நிதியறிக்கை | $5-10 பில்லியன்[3][4] |
மொ.உ.உ இன் சதவீதம் | ~25.0% |
தொழிற்துறை | |
உள்நாட்டு வழங்குனர் | Chongyul Arms Plant Ryu Kyong-su Tank Factory Sungri Motor Plant |
வெளிநாட்டு வழங்குனர் | உருசியக் கூட்டரசு உக்ரைன் ஈரானிய இசுலாமியக் குடியரசு |
ஆண்டு ஏற்றுமதி | $ 100.00 மில்லியன் |
தொடர்புடைய கட்டுரைகள் | |
தரங்கள் | Comparative military ranks of Korea |
அங்குல் எழுத்துக்கள் | 조선인민군 |
---|---|
Hancha | 朝鮮人民軍 |
McCune–Reischauer | Chosŏn Inmingun |
Revised Romanization | Joseon Inmingun |
கொரிய மக்கள் இராணுவத்தின் ஆண்டு செலவுத் திட்டம் தோராயமாக ஆறு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் அறிவியல் மற்றும் அனைத்துலக பாதுகாப்பு நிறுவன அறிக்கைப்படி வட கொரியா இரண்டு முதல் ஒன்பது வரையிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கவல்ல பிளவுப் பொருட்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.[5] வட கொரியாவின் சொங்குன் ("இராணுவம் முதலில்") கொள்கை கொரிய மக்கள் இராணுவத்தை அரசு மற்றும் சமூகத்தில் ஒரு முதன்மை இடத்தில் வைத்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.