Remove ads
From Wikipedia, the free encyclopedia
கேரள அரசு சின்னம் (State emblem of Kerala [1]) என்பது கேரள அரசு பயன்படுத்தும் சின்னமாகும். இதில் இரண்டு யானைகள் தேசிய மற்றும் மாநில இலட்சினைகளை காப்பதுபோல் உள்ளன.
கேரள அரசு சின்னம் | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | கேரள அரசு |
உள்வாங்கப்பட்டது | 1960 |
முடி | உச்சியில் அசோக சிங்கம் |
விருதுமுகம் | ஒரு வட்டத்தில்: ஸ்ரீ பத்மநாபனின் சங்கு |
ஆதரவு | 2 யானைகள் துதிக்கைகளைத் தூக்கியபடி இருபுறமும் உள்ளன |
Other elements | கேடயத்தின் கீழே 2 பதாகைகளில், ஒன்றில் "Government of Kerala" என்று ஆங்கிலத்தில் மற்றும் "கேரள சர்கார்" என்று மலையாளத்திலும் உள்ளன. |
Use | பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களிலும்; மாநில அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு பொதுக் கட்டிடங்களின் வெளிப்புறம் மற்றும் மாநிலச் செய்தி தொடர்புகளிலும். |
கேரள அரசு சின்னமானது திருவாங்கூர் இராச்சிய அரசு சின்னத்தில் இருந்து வந்ததாகும்.[சான்று தேவை] இந்த அரச சின்னமானது , இரண்டு யானைகள் ஸ்ரீ பத்மநாபனின் சங்கை காப்பது போல அடையாளப்படுத்துகிறது. அந்த சங்குக்கு மேலே இந்திய தேசிய சின்னமாகிய சாரநாத் சிங்கம் காணப்படுகிறது. இது இந்தியாவின் பெரும்பாலான மாநிலச் சின்னங்களில் பொதுவாக காணப்படுவதாகும். சின்னத்தின் அடிப்பகுதியில் பிரகதாரண்யக உபநிடதத்தில் உள்ள சமசுகிருத வாக்கியம் தேவநாகரியில் உள்ளது. இதன் பொருள் "May light spell away darkness". தற்போதைய கேரள சின்னமானது கம்யூனிஸ்ட் ஆட்சியை இந்திய நடுவண் அரசு அகற்றியபின் 1960 இல் பதவிக்கு வந்த பட்டம் தாணு பிள்ளையின் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னமாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.