மலேசிய கூட்டரசு சாலை 2
தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
மலேசிய கூட்டரசு சாலை 2 (ஆங்கிலம்: Malaysia Federal Route 2) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். 276.9 கி.மீ. (172 மைல்) நீளம் கொண்டது. 1887-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாலை. அந்த வகையில் இந்தக் கூட்டரசு சாலை 2, மலேசியாவில் வரலாறு படைக்கும் சாலைகளில் ஒன்றாகும்.
மலேசிய கூட்டரசு சாலை 2 Malaysia Federal Route 2 Laluan Persekutuan Malaysia 2 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
AH141 (கம்போங் பண்டார் டாலாம்–காராக்) இன் பகுதி | |
நீளம்: | 276.9 km (172.1 mi) |
பயன்பாட்டு காலம்: | 1915 – |
வரலாறு: | 1959-இல் முடிக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர் |
சாலைகள் நார்த்போர்ட் நெடுஞ்சாலை | |
கிழக்கு முடிவு: | குவாந்தான் துறைமுகம், பகாங் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கிள்ளான்; சா ஆலாம்; கோலாலம்பூர்; கோம்பாக்; காராக்; லஞ்சாங்; மெந்தகாப்; தெமர்லோ; மாரான்; கம்பாங்; குவாந்தான்; பெசெரா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்தையும்; பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் துறைமுகத்தையும் இந்தச் சாலை இணைக்கிறது.[1]
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு - மேற்கு கடற்கரைகளை இணைக்கும் சாலை அமைப்பின் முதுகெலும்பாக இருந்தது. இந்தச் சாலையின் மேம்பாட்டுச் சாலையாக இப்போது வந்து உள்ள சாலை (East Coast Expressway E8). கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை .
மலேசிய கூட்டரசு சாலை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) மற்றும் கோலாலம்பூர் - குவாந்தான் சாலை (Kuala Lumpur–Kuantan Road). இரண்டு பிரிவுகளும் கோலாலம்பூர் மாநகரில் இணைகின்றன. கூட்டரசு சாலை 2, கிள்ளான் துறைமுகத்தில் அதன் தொடக்கம் தொடங்குகிறது. அதாவது அதன் ’0’ கி.மீ.
இந்தக் கூட்டரசு சாலை , முதன்முதலில் 1887-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது இதன் தொடக்கம் பகாங் பெந்தா நகரில் அமைந்து இருந்தது. அங்கு இருந்து குவாந்தான் நகர் வரை நீடித்தது. 1928-ஆம் ஆண்டில் கூட்டரசு சாலை 2, பெந்தா நகரில் இருந்து கோலாலம்பூர் வரை இணைக்கப்பட்டது.
2004 ஆகஸ்டு 1-ஆம் தேதி கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை திறக்கப்பட்டது. அதுவரையில் இந்தக் கூட்டரசு சாலை 2 தான் முதன்மைச் சாலையாக விளங்கியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.