Remove ads
From Wikipedia, the free encyclopedia
குறுந்தகடு (காம்பெக்ட் டிஸ்க் CD) என்பது ஒரு ஒளி வட்டு வடிவமுள்ள தரவுத் தேக்க ஊடகமாகும், இது பிலிப்ஸ் மற்றும் சோனி ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்டு, 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வடிவமானது முதலில் ஒலிப்பதிவுகளை சேமிக்கவும், கேட்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது ஆனால் பின்னர் தரவுத் தேக்ககத்திற்காக அமைத்துக்கொள்ளப்பட்டது (சிடி-ரோம்). ஒருமுறை மட்டுமே எழுதக்கூடிய ஒலி மற்றும் தரவுத் தேக்கத் தட்டு (CD-R ), மீண்டும் எழுதக்கூடிய ஊடகம் (CD-RW), காணொலிக் குறுந்தகடு (VCD), மேன்மையான காணொலிக் குறுந்தகடு (SVCD), புகைப்பட குறுந்தகடு, பட குறுந்தகடு, CD-i, மேம்பட்ட ஒளிப்பதிவு குறுந்தகடு, போன்ற மற்ற பல வடிவங்கள் இவற்றில் இருந்து பின்னர் தழுவப்பட்டன. முதல் ஒலி குறுந்தகடு இயக்கியான சோனி CDP-101, அக்டொபேர் 1982 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் விற்பனைக்காக வெளியிடப்பட்டது.
வழக்கமான குறுந்தகடுகள், 120 மில்லிமீட்டர் (4.7 அங்குலம்) குறுக்களவு கொண்டு, 80 நிமிட சுறுக்கப்படாத ஒளிப்பதிவு அல்ல 700MiB உடைய தரவுகளை பிடித்துக்குக்கொள்ளும் கொள்ளளவைக்கொண்டது. சிறிய குறுந்தகடுகள் பல்வேறு குறுக்களவுகளில் உள்ளன, அவை 60 இருந்து 80 மில்லிமீட்டர் வரை (2.4 இருந்து 3.1 அங்கலம் வரை) இருக்கும்; சில நேரங்களில் அவை 24 நிமிட ஒளிப்பதிவுகளை சேமிக்ககூடிய ஒற்றை குறுந்தகடுகளாக அல்லது சாதன இயக்கிகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
1982 ஆம் ஆண்டு, இந்த தொழில் நுட்பம் அறிமுகம் ஆகும் பொழுது, 10 MB கொள்ளளவைக் கொண்ட ஒரு கணினியின் வன்வட்டோடியை விட ஒரு குறுந்தகடானது, பல மடங்கு தரவுகளை சேமிக்கும் கொள்ளளவைக் கொண்டிருந்தது. 2010 யிற்குள், வன்வட்டோடிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்து எளிய விலையை எட்டின. மேலும் பொதுவாக, ஓராயிர குறுந்தகதுகளின் கொள்ளளவை, வன்வட்டோடிகள் தந்து கொண்டிருந்தன. 2004 ஆம் ஆண்டில், ஒலி தேக்க குறுந்தகடுகள், CD-ROMகள் மற்றும் CD-Rகளின் உலகளாவிய விற்பனை, 3000 கோடி தட்டுகளை அடைந்தது. 2007 யிற்குள், 20,000 கோடி குறுந்தகடுகள் உலகம் முழுவதுமாக விற்கப்பட்டிருந்தது.[1]
2000 ஆம் ஆண்டின் ஆரம்பநிலையிலிருந்து, குறுந்தகடுகள் மற்ற இலக்கமுறைத் தரவுச் சேமிப்பு மற்றும் பரவல் முறைகளினால் மாற்றப்பட்டன. இதன் விளைவினால் 2010 இற்குள், அமெரிக்காவில் ஒலி தேக்க குறுந்தகடுகளின் விற்பனையின் எண்ணிக்கை 50% வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், அவை இசை துறையின் பிரதான விநியோக முறையாக நீடித்த்திருந்தது.[2] 2014 ஆம் ஆண்டில், டிஜிட்டல் இசையின் வருமானமானது, பொருள் வடிவம் கொண்டவற்றின் விற்பனைக்கு ஈடாக அமைந்தது.[3]
முதலாக, எண்ணியல் தகவல்களை, ஹாலோஜென் விளக்கினால் பின்புறம் ஒளிவேற்றப்பட்ட, ஒரு ஒளிபுகு இதழில் பதிவுசெய்யும் கருவியை கண்டுபிடித்தற்கான பெயர், அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜேம்ஸ் டி . ரஸ்ஸெல் என்பவருக்கு உரியதாகும். [4][5] 1966 ஆம் ஆண்டு, ரஸ்ஸெலின் உரிமைக் காப்பீட்டு விண்ணப்பம் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்டது பிறகு 1970 ஆம் ஆண்டு அவருக்கு உரிமைக் காப்பீடு வழங்கப்பட்டது. வழக்கினை தொடர்ந்து சோனி மற்றும் பிலிப்ஸ், 1980களில் ரஸ்ஸெலின் உரிமைக் காப்பீடுகளுக்கு உரிமம் பெற்றனர் (அச்சமயத்தில் உரிமம் கொண்டிருந்த ஒரு கனடாவை சேர்ந்த நிறுவனமான, ஆப்டிகல் ரெகார்டிங் கார்ப்.).[6][7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.