From Wikipedia, the free encyclopedia
குர்பாக் சிங் தில்லான் (Gurbaksh Singh Dhillon) (18 மார்ச் 1914 - 6 பிப்ரவரி 2006) இவர் இந்திய தேசிய இராணுவத்தில் ஓர் அதிகாரியாக இருந்தார். இவர் "மாட்சிமை தாங்கிய பிரித்தானியப் பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தார்" என்று குற்றம் சாட்டப்பட்டார். ஜெனரல் ஷா நவாஸ் கான் மற்றும் பிரேம் குமார் சாகல் ஆகியோருடன், 1945 நவம்பர் 5 ஆம் தேதி செங்கோட்டையில் தொடங்கிய ஐ.என்.ஏ விசாணைகளில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்திய சுதந்திர பேச்சுவார்த்தைகளில் இவரும் முக்கிய பங்கு வகித்தார்.
குர்பக்ஷ் சிங் தில்லான் | |
---|---|
1940இல் குர்பக்ஷ் சிங் தில்லான்s | |
பிறப்பு | Algon, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தரண் தரண் மாவட்டம், பஞ்சாப், இந்தியா) | 18 மார்ச்சு 1914
இறப்பு | 6 பெப்ரவரி 2006 91) குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா | (அகவை
சார்பு | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (1940 – 1942) நாடு கடந்த இந்திய அரசு (1942 – 1945) |
போர்கள்/யுத்தங்கள் | மலேயப் போர் |
இவர், 1914 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி ஆல்கானில் தில்லன் ஜாட் குடும்பத்தில் பிறந்தார். பேரரசர் 8 வது ஜார்ஜின் சொந்தக் குதிரைப் படையில் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய சர்தார் தகர் சிங்கின் நான்காவது குழந்தையாவர்.
இவரது ஆரம்பக் கல்வி சாங்கா மங்கா அரசு ஆரம்பப் பள்ளியில் இருந்தது. 4 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் பல பள்ளிகளில் பயின்றார்.
இந்த காலகட்டத்தில் இவர் பல்வேறு மதங்களினால் ஈர்க்கப்பட்டதனால் இவரை ஒரு மதச்சார்பற்ற நபராக மாற்றியது. இவர் பாரத சாரண சாரணிய இயக்க உறுப்பினராக இருந்தார். இவருக்கு பாரசீகம், உருது, இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் பேசத் தெரிந்திருந்தது
1931 ஆம் ஆண்டில், மோன்ட்கோமரியின் தயானந்த் ஆங்கிலோ வெர்னாகுலர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர், ராவல்பிண்டியின் கார்டன் மிஷன் கல்லூரியில் அறிவியல் பீடத்தில் சேர்ந்தார்.
இவரது தந்தையின் நண்பரான ஜே.எஃப்.எல் டெய்லர், இவரை ஒரு சிப்பாயாக இந்திய ராணுவத்தில் சேரவும், இவரது கல்வியை மேலும் மேம்படுத்தவும் பரிந்துரைத்தார். இவர் மே 29, 1933 அன்று 10/14 வது பஞ்சாப் படைப்பிரிவின் பயிற்சி பட்டாலியனில் சேர்ந்தார். மாதத்திற்கு பதினைந்து ரூபாய் ஊதியம் பெற்றார். இவர் தனது பயிற்சியை மார்ச் 1934 முதல் வாரத்தில் முடித்தார்.
சூன் 1936 இல், தேராதூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் நோவ்காங்கின் கிட்ச்னர் கல்லூரியில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தில்லன் 1928 இல் தனது பதினான்கு வயதில் பசந்த் கவுர் என்பவரை மணந்தார். இவர்களின் முதல் குழந்தை, அமிர்தா, ஏப்ரல் 15, 1947 அன்று சிம்லாவில் பிறந்தார். அமிர்தா பதினொரு ஆண்டுகள் பனஸ்தாலி வித்யாபீடத்தில் படித்தார், பின்னர் மருத்துவரானார். இவர்களுக்கு மேலும், அமர்ஜித் மற்றும் சர்வ்ஜித் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர், அவர்கள் இருவரும் ஹடோத் சிவ்புரியில் குடியேறினர். இவரது மனைவி 1968 மார்ச் 19 அன்று சிவபுரியில் காலமானார்.
தனது வாழ்நாளின் கடைசி நாட்களில் மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த இவர், குவாலியரில் உள்ள ஜே.ஏ. மருத்துவமனையில் 2006 பிப்ரவரி 6 அன்று இறந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.