இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு (German Democratic Republic, செருமன் சனநாயகக் குடியரசு, இடாய்ச்சு மொழி: Deutsche Demokratische Republik அல்லது Ostdeutschland; கிழக்கு செருமனி (East Germany) 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அக்டோபர் 7, 1949 இல் சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் இதன் தலைநகராக இருந்தது.
இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு German Democratic Republic Deutsche Demokratische Republik | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1949–1990 | |||||||||||
குறிக்கோள்: "Proletarier aller Länder, vereinigt Euch!" ("உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!") | |||||||||||
நாட்டுப்பண்: "Auferstanden aus Ruinen" ("சிதையல்களில் இருந்து எழுந்தது") | |||||||||||
தலைநகரம் | கிழக்கு பெர்லின் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | அதிகாரபூர்வம்: இடாய்ச்சு அதிகாரபூர்வமற்ற சிறுபான்மை மொழிகள்: சோர்பிய மொழி | ||||||||||
அரசாங்கம் | மார்க்சிய-லெனினிச ஒரு-கட்சி சோசலிசம் | ||||||||||
தலைவர் | |||||||||||
• 1949–60 | வில்லெம் பீக் (அரசுத்தலைவர்) | ||||||||||
• 1960–73 | வால்ட்டர் ஊல்பிரிக்ட் | ||||||||||
• 1973–76 | வில்லி ஸ்டோப் | ||||||||||
• 1976–89 | எரிக் ஒனெக்கர் | ||||||||||
• 1989 | ஏகன் கிரென்ஸ் | ||||||||||
• 1989–90 | மான்பிரெட் கெர்லாக் | ||||||||||
• 1990 | சபின் பெர்க்மான்-போல் | ||||||||||
சட்டமன்றம் | வொல்ஸ்கிராமர் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பனிப்போர் | ||||||||||
• நிறுவல் | 7 அக்டோபர் 1949 | ||||||||||
• இறுதி உடன்பாடு | 25 செப்டம்பர் 1990 | ||||||||||
3 அக்டோபர் 1990 | |||||||||||
நாணயம் | மார்க் (M) 30 சூன் 1990 வரை, named: 1948–64 Deutsche Mark (DM) 1964–67 Mark der Deutschen Notenbank (MDN) Deutsche Mark (DM) as of 1 July 1990 | ||||||||||
அழைப்புக்குறி | 37 | ||||||||||
இணையக் குறி | .dd[1] | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | செருமனி |
1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். நேட்டோப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி பனிப்போர் எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த பேர்லின் சுவர் நவம்பர் 9, 1989 இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் மார்ச் 18, 1990 இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3, 1990இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.