From Wikipedia, the free encyclopedia
கிளீசு 581 e (Gliese 581 e, ஒலிப்பு: ˈɡliːzə) என்பது துலா என்னும் நாள்மீன் கூட்டத்தில் ஏறத்தாழ 20 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள M3V வகை கிளீசு 581 என்னும் சிவப்புக் குறுவிண்மீன் அருகே காணப்படும் நான்காவது புறக்கதிரவமண்டலக் கோள் ஆகும். இது குறைந்தது 1.9 பூமி நிறை கொண்டதாக இருக்கும் என்றும், இதுவே இதுவரை கண்டுபிடித்ததில் மிகச்சிறிய, பூமிக்கு நெருக்கமான புறக்கதிரவ மண்டல கோள் என்றும் கருதுகின்றனர். ஆனால் இதன் விண்மீன் சுற்றுப்பாதை 0.03 AU (1 AU = சராசரி கதிரவன்-பூமி தொலைவு = 1.495 978 706 91×1011 மீ). இந்த நெருக்கமான தொலைவால் அங்கு உயிர்கள் வாழ்வது அரிது. விண்மீனுக்கு மிக அருகில் இருப்பதால் கதிர்வீச்சால் அதிக வெப்பம் இருக்குமாதலால் காற்றுமண்டலம் அல்லது வளிமண்டலம் ஏதும் இருப்பதும் அரிது[1][2][3][4]
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
தாய் விண்மீன் | ||
விண்மீன் | கிளீசு 581 (Gliese 581) | |
விண்மீன் தொகுதி | துலா | |
வலது ஏறுகை | (α) | 15h 19m 26s |
சாய்வு | (δ) | −07° 43′ 20″ |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 10.55 |
தொலைவு | 20.3 ± 0.3 ஒஆ (6.2 ± 0.1 புடைநொடி) | |
அலைமாலை வகை | M3V | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.03[1] AU |
மையப்பிறழ்ச்சி | (e) | 0[1] |
சுற்றுக்காலம் | (P) | 3.14942 ± 0.00045[1] நா |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
மிகக்குறைந்த திணிவு | (m sin i) | 1.9[1] M⊕ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | ஏப்ரல் 21 2009 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | மிக்கேல் மேயர் குழுவினர் | |
கண்டுபிடித்த முறை | ஆர விரைவு முறை | |
கண்டுபிடித்த இடம் | சுவிட்சர்லாந்து | |
கண்டுபிடிப்பு நிலை | இன்னும் அச்சாகவில்லை[1] | |
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
இக்கோளை சுவிட்சர்லாந்தில் உள்ள செனீவா விண்காணகத்தைச் (Observatory of Geneva) சேர்ந்த மிக்கேல் மேயர் (Michel Mayor) முன்னின்று நடத்திய குழுவினர் உயர்துல்லிய ஆர விரைவு கோள் தேடுனி எனப்படும் ஆர்ப்சு (HARPS, High Accuracy Radial velocity Planet Searcher) என்னும் கருவியின் துணைகொண்டு சிலி நாட்டில் உள்ள லா சியா விண்காணகத்தின் (La Silla) 3.6 மீ விட்டத் தொலைநோக்கியின் வழியாகக் கண்டுபிடித்தனர். இக் கண்டுபிடிப்பு ஏப்ரல் 21, 2009 அன்று அறிவிக்கப்பட்டது. மிக்கேல் மேயரின் குழு பயன்படுத்திய ஆர விரைவு முறை வழி சுற்றுப்பாதையின் அளவையும், கோளின் நிறையையும் விண்மீனின் சுற்றுப்பாதையில் ஈர்ப்புவிசை மாற்றத்தால் ஏற்படும் சிறு மாற்றங்களைக் கொண்டு அறியப்படுகின்றது[1].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.