கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்

From Wikipedia, the free encyclopedia

கிர்க்காஃபின் விதிகள் (Kirchhoff's circuit laws) மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:

  1. கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
  2. கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி

இவ்விதிகளை கிர்க்காஃப் (Gustav Kirchhoff) என்ற ஜெர்மானிய அறிஞர் 1845 இல் முதலில் எடுத்துக் கூறினார்.

கிர்க்காஃபின் மின்னோட்ட விதி

Thumb
i1 + i4 = i2 + i3

கிர்க்காஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு:

எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும். [அல்லது] ஒரு மின்சுற்றில், எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழியாகும். இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

இங்கு, n என்பது ஒரு புள்ளியில் உள்நுழையும் அல்லது வெளியேறும் மின்னோட்டங்களின் எண்ணிக்கை.

கலப்பு மின்னோட்டங்களுக்கு இச்சமன்பாடு பின்வருமாறு தரப்படும்:

உற்று நோக்கினால் இது மின்னணுக்களின் அழியாமையின் விளைவு எனக் காணலாம்.

இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, கொண்மியின் தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் பெயர்வு மின்னோட்டத்தைக் கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும்.

மேலும் நுட்பமாக, இவ்விதியை கீழ்க்கண்ட சமன்பாட்டிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இது மின்னணுக்களின் அழியாமையையே கூறுகிறது. அதாவது, ஒரு மூடப்பட்ட பரப்பிலிருந்து வெளியேறும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டுத்தொகை, அப்பரப்பால் சூழப்பட்ட பருமனுக்குள் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையின் மாறுவீதத்திற்குச் சமமாகும்.

கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி

Thumb
v1 + v2 + v3 + v4 = 0

ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகைச் சுழியாகும். இது ஆற்றல் அழியாமையின் விளைவாகும்.

இவற்றையும் பார்க்க

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.