கிருஷ்ணன் தூது (Krishnan Thoothu) அல்லது ஸ்ரீ கிருஷ்ணன் தூது (Sri Krishnan Thoothu) 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன், பி. கண்ணாம்மா, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
இத்திரைப்படத்துடன் கொழுக்கட்டை குப்பு என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவைக் குறும்படமும் காண்பிக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் கிருஷ்ணன் தூது, இயக்கம் ...
கிருஷ்ணன் தூது
Thumb
ஸ்ரீ கிருஷ்ணன் தூது பாட்டுப் புத்தக முகப்பு
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புசேனா செட்டியார்
ராஜகோபால் டாக்கீசு
திரைக்கதைநாகநல்லூர் லட்சுமி நாராயண பாகவதர்
வசனம்நாகநல்லூர் லட்சுமி நாராயண பாகவதர்
நடிப்புசெருகளத்தூர் சாமா
விசலூர் சுப்பிரமணிய பாகவதர்
சாண்டோ நடேசபிள்ளை
என். எஸ். கிருஷ்ணன்
பி. கண்ணாம்மா
டி. ஏ. மதுரம்
கே. டி. வி. சக்குபாய்
பாடலாசிரியர்பாபநாசம் சிவன், ராஜகோபாலய்யர்
ஒளிப்பதிவுகமால் கோஷ்
நடனம்தனபாக்கியம், ஜானகிபாய்
கலையகம்மோகன் பிக்சர்சு, மதராசு
வெளியீடு1940
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

திரைக்கதை

இத்திரைப்படத்தின் கதையானது கிருஷ்ணன் (செருகுளத்தூர் சாமா) பாண்டவர்களுக்கான நீதியை கௌரவ மன்னன் துரியோதனனிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பணியை மேற்கொண்ட வரலாற்றை பற்றியது. கதாநாயகியாக அறிமுக நடிகை பி. கண்ணாம்பா நடித்தார். இவரும் செருகுளத்தூர் சாமாவும் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோரின் நகைச்சுவைக் குறும்படத்திற்கு பங்களித்தனர்.

நடிகர்கள்

நடிக, நடிகையரின் பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் இடமிருந்தும்,[3] படத்தின் பாட்டுப் புத்தகத்தில் இருந்தும்[1] பெறப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...
நடிகர்கள்
நடிகர்பாத்திரம்
சிறுகளத்தூர் சாமாகிருட்டிணன்
விசலூர் சுப்பிரமணிய பாகவதர்துரியோதனன்
நாகைநல்லூர் இலட்சுமிநாராயண பாகவதர்விதுரர்
சாண்டோ நடேசபிள்ளைகர்ணன்
டி. பாலசுப்பிரமணியம்பலராமர்
எஸ். எஸ். மணி பாகவதர்தருமன்
சி. எஸ். தன்சிங்பீமன்
ஆர். எஸ். ராமசுவாமி ஐயங்கார்அருச்சுனன்
கே. வி. கிருஷ்ணன்நகுலன்
கொத்தமங்கலம் ராமசாமிசகாதேவன்
எம். ஆர். துரைராஜ்சாத்தகி
எம். ஏ. கணபதி பட்அசுவத்தாமன்
எம். எஸ். வேலாயுதம்தேவேந்திரன்
டி. கோபால்ராவ்விராட ராஜன்
எல். நாராயண சோமயாஜலுசஞ்சயன்
சி. சின்னையாதிருதராட்டிரன்
ஏ. எஸ். ஏ. சாமிபீஷ்மர்
எம். திருவேங்கடம்துச்சாதனன்
கே. தேவநாராயணன்விகர்ணன்
டி. எம். பாபுதுர்வாசர்
பி. ஜி. வெங்கடேசன்நாரதர்
ஜாலி கிட்டு ஐயர்சகுனி
என். எஸ். கிருஷ்ணன்-
ஈ. கிருஷ்ணமூர்த்திகந்தன்
குஞ்சிதபாதம் பிள்ளைரங்கன்
மூடு
மேலதிகத் தகவல்கள் நடிகை, பாத்திரம் ...
நடிகைகள்
நடிகைபாத்திரம்
பி. கண்ணாம்பாதிரௌபதி
எம். ஆர். வாசுவாம்பாள்குந்தி தேவி
எம். என். விஜயாள்சத்தியபாமா
டி. எஸ். கிருஷ்ணவேணிருக்மணி
எம். கே. பாபுஜிபால குந்தி
டி. ஏ. மதுரம்-
மூடு

இவர்களுடன், எம். ஆர். கனகரத்தினம், எம். ஆர். ராமலட்சுமி, புஷ்பம்மாள், ராஜீவி, பட்டு, சுலோசனா, லட்சுமிகாந்தம், சங்கரி, பத்மாவதி ஆகியோரும் நடித்தனர்.

  • நடனம்: தனபாக்கியம், ஜானகிபாய்
  • குழந்தைகள் நடனம்: பேபி ரங்கா, சுலோசனா

கொளுக்கட்டை குப்பு நடிகர்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகர், பாத்திரம் ...
கொளுக்கட்டை குப்பு நடிகர்கள்
நடிகர்பாத்திரம்
ஈ. கிருஷ்ணமூர்த்திகொளுக்கட்டை குப்பு
என். எஸ். கிருஷ்ணன்அருணாசலம்
டி. ஏ. மதுரம்சுப்புத்தாய்
மூடு

பாடல்கள்

படத்தில் இசையமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பாடல் வரிகளை பாபநாசம் சிவனும், ராஜகோபால ஐயரும் எழுதினர். பாடல்களை ஜோதிசு சின்கா பதிவு செய்தார். மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை விட கொளுக்கட்டை குப்பு நாடகத்தில் 2 நகைச்சுவைப் பாடல்கள் இடம்பெற்றன.[1]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
பாடல்கள்
எண்.பாடல்பாடியோர்பாத்திரங்கள்இராகம்/தாளம்
1ஸ்ரீ மாதவனே மழை நிறத்தவனேகுழுவினர்-மோகன்கல்யாணி-ஆதி
2இணையேயில்லாத எங்கள் இடையர் குலம்சிறுகளத்தூர் சாமாகிருட்டிணன்இந்துத்தான் பயாக்-ஏகம்
3அன்புடைய தோழிமாரே, ஆடுவோமின்னேரம்எம். என். விஜயாள்சத்தியபாமா, தோழிகள்இந்துத்தானி சாரங்கா-ஆதி
4பரிகாசமேனோ மாயாஎம். என். விஜயாள்பாமாஇந்துத்தானி பகார்-ஆதி
5பிரேம சுபாவிக பந்தமதுலகேசிறுகளத்தூர் சாமா, எம். என். விஜயாள்கிருட்டிணன், பாமாபயாக்-ஆதி
6அம்பா துளசி தாயேடி. எஸ். கிருஷ்ணவேணிருக்மணிஇந்துத்தானி கமாசு-ஆதி
7தருமமிதுவே நாதாபி. கண்ணாம்பாதிரௌபதிஇந்த்துத்தான்-ஆதி
8எனை நிகர்பவரினி யாரே இலரேவிசலூர் சுப்பிரமணிய பாகவதர்துரியோதனன்மோகனம்-ஆதி
9தாரணி வாழ்வது தாரக மாமாஎல். நாராயண சோமயாஜலுசஞ்சயன்கானடா-ஆதி
10நீ பாரத வமரில் யாவரையு நீராக்கிகொத்தமங்கலம் ராமசாமிசகாதேவன்செஞ்சுருட்டி
11நீதியிதோ இனி நீர் சமாதானம்பி. கண்ணாம்பா, சிறுகளத்தூர் சாமாதிரௌபதி, கிருட்டிணன்இந்துத்தானி பகடி கமாசு-ஆதி
12சலேத்தி ஹிமவான் சைல:சிறுகளத்தூர் சாமாகிருட்டிணன்சுலோகம்-எதுகுலகாம்போதி
13ஹே கோபாலக! ஹே க்ருபா ஜலநிதேநாகைநல்லூர் இலட்சுமிநாராயண பாகவதர்விதுரர்சுலோகம்-நாதநாமக்ரியை
14ஒருமகர்க் காகக்கோடி யுறுதவமியற்று வாரேசிறுகளத்தூர் சாமாகிருட்டிணன்விருத்தம்-காம்போதி
15கபட நாடக மாயவதாரீஎம். ஆர். வாசுவாம்பாள், சிறுகளத்தூர் சாமாகுந்தி, கிருட்டிணன்மிசுரமல்லார்-ஆதி
16கன்னியாயிருந்த நாளில் கடுகி துர்வாசர் வந்துஎம். ஆர். வாசுவாம்பாள்குந்திவிருத்தம்-கேதாரகௌளம்
17தம்பியரைந்து பேரும் தனித்தனி ஏவல் செய்யஎம். ஆர். வாசுவாம்பாள்குந்திவிருத்தம்
18ஜெகஜ்ஜோதி ரூபதேவா வா தினமாமணியேஎம். ஆர். வாசுவாம்பாள்குந்திபகடி-ஆதி
19மடந்தை பொற்றிருமேகலை மணியுகவேசாண்டோ நடேசபிள்ளைகர்ணன்விருத்தம்
20கல்லினுங்கடிய நெஞ்சக்கசடநாகைநல்லூர் இலட்சுமிநாராயண பாகவதர்விதுரர்விருத்தம்-சிம்மேந்திரமத்யம்
21ஓ கண்ணா கண்ணிலையோஎடுத்துக்காட்டுதிரௌபதிஅசாவேரி
22தாயவள் உரலில் அன்று தயிர் கடைக் கயிற்றால் கட்டசிறுகளத்தூர் சாமாகிருட்டிணன்மோகனம்
23உலகமெல்லாம் அருளாலேபி. கண்ணாம்பாதிரௌபதிஆஷா-ஆதி
24யமுனா விகார வாசுதேவாபி. ஜி. வெங்கடேசன்நாரதர்பகாடி
25கொஞ்சம் வாங்கி தின்னு பாருங்கோஈ. கிருஷ்ணமூர்த்திகொளுக்கட்டை குப்புநகைச்சுவைப் பாடல்
26இப்போ நான் செய்த தந்திரம் ரொம்பசரிஎன். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்அருணாசலம், சுப்புத்தாய்நகைச்சுவைப் பாடல்
மூடு

வரவேற்பு

இந்தத் திரைப்படத்தை ஆர். பிரகாஷ் சிறப்பாக இயக்கியிருந்தாலும், அறிமுக நாயகி பி. கண்ணாம்பாவின் மோசமான தமிழ் உச்சரிப்பு பெரும் குறையாக இருந்தது. அவருக்குத் தமிழ் தெரியாது, தெலுங்கு வழக்கில் பேசியது தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.[2]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.