From Wikipedia, the free encyclopedia
செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியே கியூரியோசிட்டி (Curiosity rover) ஆகும்.[1] இது ஒரு கார் அளவானது. 2011 நவம்பர் 26இல் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்ட MSL ஏவுகணை மூலம் இது செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.[2] இது ஆகஸ்து 06ஆம் திகதி 2012இல் வெற்றிகரமாகச் செவ்வாயை வந்தடைந்தது.[3] இது செவ்வாயை அடையும்முன் 563,000,000 கி.மீ. பயணித்துள்ளது.[4] கியூரியோசிட்டி தரையுளவியின் முக்கிய பணிகளாக பின்வருவன உள்ளன:
கியூரியோசிட்டி தரையுளவி | |
இயக்குபவர் | நாசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் |
|
திட்ட வகை | தரையுளவித் திட்டம் |
ஏவப்பட்ட நாள் | நவம்பர் 26, 2011 | 15:02:00.211 UTC (10:02 EST)
ஏவுகலம் | அட்லஸ் V |
ஏவு தளம் | கேப் கனாவரலில் |
திட்டக் காலம் | 668 செவ்வாய் மாதங்கள் |
தே.வி.அ.த.மை எண் | 2011-070A |
இணைய தளம் | Mars Science Laboratory |
நிறை | 900 kg (2,000 lb) |
திறன் | வெப்பக் கதிரியக்க மின்னியற்றி |
செவ்வாய் landing | |
திகதி | 6,ஆகஸ்ட், 2012, 05:17 UTC |
ஆள்கூறுகள் | அய்லிஸ் பல்லஸ் |
செவ்வாயில் , 155 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு பள்ளத்தில் , விஞ்ஞானிகள் முன்கூட்டியே கணித்துவைத்த இடத்துக்கு ஒரு மைல் தள்ளி கியூரியோசிட்டி தரையுளவி தரையிறங்கியது.இந்த பள்ளத்தை ஒட்டி ஐந்து கிலோமீட்டர் உயரமுடைய ஒரு மலையும் உள்ளது.இந்த மலையின் அடிவாரத்தில் படுகை போன்ற நில அமைப்பு இருப்பது ஒரு காலத்தில் இங்கே கணிசமான அளவில் நீர் ஓடியதைக் குறிப்புணர்த்துகிறது. ஒரு காலத்தில் நுண்ணியிர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் செவ்வாயில் இருந்திருக்குமா என்று கண்டறிய இந்த இடத்தில் கியுரியாஸிட்டி தரையிறக்கப்பட்டது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.