From Wikipedia, the free encyclopedia
கின்டர்கார்ட்டின் (Kindergarten) என்பது இடாய்ச்சு மொழிச் சொல், இதற்கு "குழந்தைகளின் தோட்டம்" என்று பொருள். பிரெட்ரிக் புரோபல் என்ற செருமானிய கல்வியாளருக்கு குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவர் மற்ற ஆசிரியர்களைத் தங்கள் குழந்தைப் பருவம் குறித்தும் அது அமைந்திருக்க வேண்டிய விதம் குறித்தும் சிந்திக்குமாறு தூண்டினார்.
அவர் 1837ம் ஆண்டு 'ப்ளாக்கென்பர்க்' நகரில் கிண்டர்கார்டென்னைத் துவக்கினார். பாடத்திட்டத்தில் பாடல்கள், கதைகள், விளையாட்டுக்கள், பரிசுகள், செயல்பாடுகள் ஆகியவை இருந்தன.
பாடல்களும், கதைகளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றலை ஊக்குவித்து, கலாசார மதிப்புகள், பழங்கால வீரர்களையும் அறிமுகப்படுத்தும். விளையாட்டுக்கள் குழந்தைகளின் சமுதாய மற்றும் உடல் திறமைகளையும், மற்றவரோடு இனைந்து செயல்படும் திறமையையும் வளர்க்கும். ப்ரோபெல்லின் பரிசுகள் உருண்டை, கனசதுரம், உருளை போன்ற வடிவங்களை அறிமுகப்படுத்தும். களிமண், மணல், அட்டை, குச்சிகள் ஆகியவற்றை வைத்து கோட்டைகள், நகரங்கள், மலைகள் உருவாக்குவார்கள்.
ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்களுடன் கிண்டர்கார்டெனையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் மூலம் அமெரிக்கக் கல்வி முறையில் இது ஒரு பகுதியாகி விட்டது. அங்கிருந்து மற்ற நாடுகளிலும் ஆங்கில பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.