பேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை (Joseph Kingsley Swampillai, பிறப்பு: 9 டிசம்பர் 1936) இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவும், திருகோணமலை உரோமன் கத்தோலிக்க ஆயரும் ஆவார்.
பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை Kingsley Swampillai | |
---|---|
திருகோணமலை ஆயர் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | திருகோணமலை |
ஆட்சி துவக்கம் | 17 மார்ச் 1983 |
ஆட்சி முடிவு | 3 சூன் 2015 |
முன்னிருந்தவர் | லியோ ராஜேந்திரம் அந்தனி |
பின்வந்தவர் | நொயெல் இம்மானுவேல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 9 திசம்பர் 1936 ஊர்காவற்றுறை, இலங்கை |
படித்த இடம் | யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி |
வாழ்க்கை
சுவாம்பிள்ளை 1936 டிசம்பர் 9 இல் இலங்கையின் வடக்கே ஊர்காவற்றுறையில் பிறந்தார்.[1] இவர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2][3][4]
பணி
சுவாம்பிள்ளை 1961 டிசம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1983 மார்ச்சில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டார்.[1] 2012 சூலையில் மட்டக்களப்பு தனியான மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து சுவாம்பிள்ளை திருகோணமலை மாவட்டத்தின் ஆயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[1] 2015 சூன் 3 இல் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[5][6][7]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.