Remove ads

காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ( ஏ.டி.ஜி.பி, Additional Director General of Police ) என்பது இந்திய காவல்துறை பணியின் ஒரு உயர் பதவி ஆகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். காவல்துறை தலைமை இயக்குநர் போலவே அதிகபட்சமாக 3-நட்சத்திர காவல்துறை தகுதி நிலையில் இருந்தாலும், ஏடிஜிபிகள் டிஜிபிக்கு சமமாக கருதப்படுகிறார்கள். இதற்கு இணையான பதவியாக கொல்கத்தா, சென்னை போன்ற சில நகரங்களின் காவல்துறை ஆணையர் அல்லது கூடுதல் செயலாளர் ஆகியோர் உள்ளனர்.

Thumb
காவல்துறை கூடுதல் இயக்குநரின் சின்னம்

இப்பதவியின் முத்திரையாக அசோகச் சின்னமாக, அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் ஐ.பி.எஸ். என்ற எழுத்து இருக்கும். ஏடிஜி தரவரிசையில் உள்ள அதிகாரிகள் தங்கள் சட்டைக் காலரில் கோர்ஜெட் பேட்ச்களை அணிவார்கள், அவை ஐஜிகளைப் போலவே கருநீல நிற பின்னணியில் கருவேல இலை வடிவத்துடன் தைக்கப்பட்டுள்ளன. ஏடிஜிக்கள் இப்போது பல்வேறு இந்திய மாநிலங்களில் மண்டலத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்குக் கீழே உள்ள பதவியாக காவல்துறைத் தலைவர் பதவியும், இதற்கு மேலே உள்ள பதவியாக காவல்துறை சிறப்பு தலைமை இயக்குநர் பதவி உள்ளது.[1][2]

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads