From Wikipedia, the free encyclopedia
காரைக்கால் வானூர்தி நிலையம் (Karaikal Airport) இந்திய ஒன்றியப் பகுதி காரைக்காலில் கட்டமைக்கப்பட்டு வரும் புத்தம்புதிய வானூர்தி நிலையத் திட்டமாகும். 2014-இல் நிறைவேற்றப்பட உள்ள இந்த வானூர்தி நிலையம் இந்தியாவில் முற்றிலுமாகத் தனியார் முதலீட்டில் கட்டமைக்கப்படும் முதல் நிலையமாகத் திகழும்.[1] கோயம்புத்தூர் நிறுவனம் ஒன்று இதனை கட்டி வருகிறது.
காரைக்கால் வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | தனியார்த்துறையில் பொதுப் பயன்பாட்டிற்கு | ||||||||||
இயக்குனர் | காரைக்கால் வானூர்தி நிலையம் நிறுவனம் | ||||||||||
அமைவிடம் | காரைக்கால், இந்தியா | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
பொதுப் பயன்பாட்டிற்கான தனியார் துறை கட்டமைப்பாக இதனை நிறைவேற்றிட குடியியல் பறப்பு அமைச்சகம் பெப்ரவரி 2011-இல் கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கியது. இருப்பினும் இந்த நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தால் இயக்கப்பட உள்ளது.[2]
562 ஏக்கர் பரப்பளவில் காரைக்கால் வானூர்தி நிலையம் தனி வரையறுக்கப்பட்டது என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சூப்பர் ஏர்போர்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பி.லிட் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் உள்ள துணை நிறுவனமாகும். முதல் கட்டமாக 1800 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் 250 பயணிகளை கையாளக்கூடியளவில் முனையக் கட்டிடமும் 150 கோடி ரூபாய்கள் செலவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ஏடிஆர்-72 இரக விரைவு காற்றாடி உந்தி கொண்ட வானூர்திகள் இயக்கப்பட முடியும்.
காரைக்கால் வானூர்தி நலைய நிறுவனம் அடுத்த கட்டங்களாக, ஐந்தாண்டுகளில் இந்த நிலையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஓடுபாதையை 2600 மீட்டர்களாகவும் முனையக் கட்டிடம் 500 பயணிகளை நெருக்குநேரத்தில் கையாளக்கூடியதாகவும் இது இருக்கும். மேலும் பத்தாண்டுகள் கழித்து ஓடுபாதை 3500 மீட்டர்களாகவும் பயணியர் போக்குவரத்து மணிக்கு 1000 பேராகவும் இருக்குமளவில் விரிவுபடுத்தப்படும்.[3]
இந்த வானூர்தி நிலையம் காரைக்காலுக்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள சமயத் திருத்தலங்களுக்கும் நகரங்களுக்கும் சென்றுவர ஏதுவாயிருக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.