காந்த அதிர்வு அலை வரைவு
From Wikipedia, the free encyclopedia
காந்த அதிர்வு அலை வரைவு அல்லது M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. காந்த அதிர்வு அலை வரைவு (M.R.I. ஸ்கேன்) உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும். ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பக்க விளைவுகள் இல்லை.

இம்முறை புரோட்டான் படமாக்க முறை (proton imaging ) என்றும் அறியப்படுகிறது.காரணம் புரோட்டான்களே படிமங்களைப் பெற முக்கிய பங்களிக்கிறது.
எம்.ஆர்.ஐ எந்திரத்தின் மூலம் உடற்பிரச்சனைகளை நாம் மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கலாம். காந்த ஒத்திசைவு படமெடுத்தல் என்பதை ஆங்கிலத்தில் மேக்னடிக் ரெசொனென்ஷ் இமேஜிங்க் என்று கூறுவதால் இந்த இயந்திரத்தை எம்.ஆர்.ஐ என்று அழைக்கிறோம். இதை மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்துகிறார்கள். உடலிலுள்ள சில காயங்களை வெறுங்கண்ணால் காண முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்க முடியாத காயங்களை மிகைப்படுத்தி பார்க்க எம்.ஆர்.ஐ ஸ்கேன் உதவுகிறது. எம்.ஆர்.ஐ மூலம் மூளை கட்டி, மூட்டு வலிகள் மற்றும் மாரடைப்பு போன்ற பெரும் வியாதிகளையும் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும். எனவே சில கண்டுபிடிக்க முடியாத தீவிர நோய்களைக் கண்டுபிடிக்க எம்.ஆர்.ஐ பேருதவி புரிகிறது. காந்த அதிர்வு அலை வரைவு அணுக்கரு காந்த ஒத்திசைவைப் பயன்படுத்தியே கணனியில் படங்களைத் தோற்றுவிக்கின்றன.
எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் செயல்பாடு
எம்.ஆர்.ஐ இயந்திரம் பெரிதான உருளையின் வடிவம் கொண்டது. ஒரு குழாயைச் சுற்றி காந்தம் இருப்பது போல எம்.ஆர்.ஐ இயந்திரம் உள்ளது. இந்த காந்தங்களால் வலுவான காந்த புலம்(strong magnetic field) அமைகிறது. அடுத்ததாக இந்த காந்தத்துக்குள் நுழையக் கூடிய நகர்கின்ற படுக்கை இருக்கும். இதனால், நோயாளி இந்த படுக்கையின் மேல் படுத்து கொண்டால், காந்த குழாய்குள் நகர்த்தப்படுவார். அதற்கு பிறகு பிரச்சனையைப் பொறுத்து, எந்த பகுதி ஸ்கேன் செய்யப்படுகிறதோ, அங்கு சுருள்(coil) ஒன்று சருக்கி விடப்படுகிறது. இந்த சுருள் மிக முக்கியமான பகுதி, ஏனென்றால் இது தான், பின்னர் பதப்படுத்த போகும் காந்த ஒத்ததிர்வு சமிக்ஞைகளை(MR signals) பெற்று கொள்கிறது. நம் உடலிலுள்ள மென்மையான திசுக்களில் நிறைய தண்ணீர் மூலக்கூறுகள் உள்ளன. காந்தம் தண்ணீர் மூலக்கூறுகளிலுள்ள புரோட்டான்கள் மேல் தன் ஆற்றலை செலுத்தும். இந்த புரோட்டான்களில் காந்தத்தன்மையால் சில விளைவுகள் தோன்றும். நாம் மின்சாரத்தை இயந்திரத்திலுள்ள கம்பி சுழல்களில் பாய்ச்சும் போது மிக வலுவான காந்த புலம் உருவாகும். இந்த புலமானது ரேடியோ கதிர்கள் இருக்கும் இடத்தில் உருவாகிறது. எனவே, நாம் வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்கயில் வெவ்வேறு சமிக்ஞைகள் உருவாகின்றன மற்றும் இந்த சமிக்ஞைகள் ரேடியோ கதிர்களால் தாக்கப்பட்டு, பின் கணினியால் பக்குவப்படுத்தப் படுகின்றன. ரேடியோ கதிர்களிலிருந்து வரும் அனைத்து சமிக்ஞைகளும் கணினியால் படமாக மாற்றப்பட்டு நமக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் சமிக்ஞைகளை முதலில் பெறுவது ஸ்கேனர். ஸ்கேனர் தான் சமிக்ஞைகளைப் பக்குவப்படுத்தி கணினிக்கு கொடுக்கிறது. பின்னர் கணினி படத்தை உருவாக்குகிறது. மேலும் தண்ணீரிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் (புரோட்டான்கள்) நம் உடலிலுள்ள தண்ணீரிலும் உள்ளன. இந்த அணுக்களை எம்.ஆர்.ஐ ஸ்கேன் திசுக்களை படமாக்க மூல உதவியாக உள்ளது.
சாதக பாதகங்கள்
காந்த அதிர்வு அலை வரைவு உடலில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிய உதவுகின்றது. ஆனால் இவற்றை எக்ரே மூலம் பார்க்க முடியாது. இது வலியை ஏற்படுத்தாது. எக்-ரேயால்(x-ray) ஏற்படும் பக்கவிளைவுகள் இவ்வியந்திரத்தால் ஏற்படாது.
காந்த அதிர்வு அலை வரைவு எனப்படும் மருத்துவ செயல்முறை மிகவும் விலைஉயர்ந்தது. இதனைப் பயன்படுத்துவதன் சிறுநீரகத்தில் பல்வேறு மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும்.
வரலாறு
1952 ஆம் ஆண்டில் ஹேர்மன் கார் (Herman Carr) என்னும் மருத்துவர், எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் ஒரு பரிமாணப் படத்தை வரைந்து ஹார்வர்ட் இளநிலை ஆய்வில் அறிக்கைப்படுத்தினார்.[1][2][3]
மேற்கோள்களு குறிப்புக்களும்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.