From Wikipedia, the free encyclopedia
காதல் சொல்ல ஆசை 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இதை தமிழ் சீனு இயக்கியுள்ளார்[2]. அசோக், வாசனா போன்றோர் நடித்துள்ளனர்.
காதல் சொல்ல ஆசை | |
---|---|
![]() காதல் சொல்ல ஆசை | |
இயக்கம் | தமிழ் சீனு |
தயாரிப்பு | எசு. விசியலட்சுமி, எசு. ராசலட்சுமி |
கதை | தமிழ் சீனு |
இசை | லேக்கா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜேக்கப் ரத்தினராசு |
படத்தொகுப்பு | ரியாசு |
கலையகம் | எமர்சைன் புரொடக்சன்சு (பி) லிமிடெட்[1] |
வெளியீடு | மார்ச்சு, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அசோக்கின் குடும்பத்தில் அவரின் அப்பா, தாத்தா என எல்லோரும் காவல் அதிகாரிகளாக இருந்தவர்கள். அப்படி தலைமுறை தலைமுறையாக காவலர் குடும்பமாக வாழும் இவர்களது குடும்பத்தில் அசோக்கையும் காவல் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்பது அவரது அப்பாவின் ஆசை. ஆனால், அசோக்குக்கு இதில் விருப்பமில்லை.
எனவே, நண்பர்களுடன் தனியாகத் தங்கி வேலை தேடி வருகிறார். இந்நிலையில் ஒருநாள் வாசனாவின் செல்போன் அசோக்கிடம் கிடைக்கிறது. அதை வாசனாவிடம் கொடுக்கச் செல்லும்போது வாசனா வேலை செய்யும் நிறுவனத்திலேயே இவருக்கும் வேலை கிடைத்துவிடுகிறது. வாசனாவை ஒருதலையாகக் காதலிக்கவும் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் மகன் மது ஒருநாள் வாசனாவை பார்க்கிறான். இறந்து போன தன்னுடைய காதலிபோல் இருக்கும் அவள்மீது காதல் கொள்கிறான். அங்கேயே நல்ல நண்பர்களாக பழகும் மதுவுக்கும், அசோக்குக்கும் இதில் போட்டி ஏற்படுகிறது. இந்தநிலையில் யாருடைய காதல் வெற்றி பெற்று, வாசனா யாருடன் சேர்ந்தாள் என்பதே மீதிக்கதை.
Seamless Wikipedia browsing. On steroids.