களைப்பு
From Wikipedia, the free encyclopedia
களைப்பு (Fatigue) என்பது, ஒரே வேலையினைத் தொடர்ந்து செய்யும் போது சில காலத்தில் அந்த வேலையைச் செய்ய ஆர்வம் குறைந்து அந்த வேலையைக் கைவிடத் தோன்றும் மனம் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த ஒரு நிலையாகும்.

வகைகள்
களைப்பு உடல் களைப்பு, மனக் களைப்பு என இரண்டு வகைப்படும்.
உடல் களைப்பு
உடல் வேலை செய்யும் போது அதற்குத் தேவையான சக்தியைத் திசுக்கள் பிராண வாயு, உணவுப் பொருள்கள் மூலம் பெறுகின்றன. பெற்றதை அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. சக்தியைப் பயன்படுத்திய பின் நச்சுத் தன்மையுள்ள கழிவுப் பொருள்களாக வெளியாகின்றன. அவை குருதியில் கலந்து உறுப்புகளைச் செயலை குறைக்கச் செய்வதே உடல் களைப்பு எனப்படுகிறது. உடல் களைப்பினை எர்கோகிராப் என்ற கருவி மூலம் ஆராயலாம்.
மனக் களைப்பு
மனம் தொடர்ச்சியாகக் கடுமையான வேலையைச் செய்வதால் மனதில் ஏற்படும் மாற்றத்தின் விளைவே மனக் களைப்பு ஆகும். உடல் களைப்பானது மனக் களைப்பையும் ஏற்படுத்தவல்லது.[1]
காரணங்கள்
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி, குறைவான உறக்கம் போன்றவை களைப்புக்கான முக்கியக் காரணங்கள் ஆகும்.[2] முதுமை, கர்ப்பக் காலம், வாழ்க்கை முறை, உடல் பருமன், சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகை பிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் காரணங்களே.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.