கருவமிலங்கள் அல்லது கருக்காடிகள் (Nucleic acids) எனப்படுபவை உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான டி.என்.ஏ (தாயனை அல்லது ஆக்சியகற்றப்பட்ட இரைபோ கருவமிலம்), ஆர்.என்.ஏ (ஆறனை அல்லது இரைபோ கருவமிலம்) என்பவற்றைக் கொண்ட உயிரியல் மூலக்கூறுகளாகும். இவையே உயிரினங்களின் அனைத்து உடலியங்கியல் தேவைகளுக்குமான புரதங்களை ஆக்கத் தேவையான அமினோ அமிலங்களுக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இதனை 1871 இல் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரிடிரிக் மியெசர் (Friedrich Miescher) ஆவார்.[3]
கருவமிலங்கள் இரைபோசு எனப்படும் ஐங்கரிம இனியம் ஒன்றையும், பொசுபேற்று மூலக்கூறு ஒன்றையும், நைதரசக் காரம் அல்லது நைதரச உப்புமூலம் ஒன்றையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலியாலானவையாகும்.
இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் காபோவைதரேட்டுக்கள், புரதங்கள், லிப்பிட்டுக்கள் ஆகும்.

Thumb
இரு முக்கியமான கருவமிலங்களுக்கு இடையேயான ஒப்பீடு. இருவகைக் கருவமிலங்களின் சுருளமைப்பையும், அவற்றில் உப்பு மூலங்களின் பிணைப்புக்களையும் எடுத்துக் காட்டும் படம்[1][2]
Thumb
1869 இல், கருவமிலங்களை முதலில் கண்டறிந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் பிரிடிரிக் மியெசர். அவர் இவற்றை நியூக்கிளின் என்று அழைத்ததுடன், அவை மரபியலில் தொடர்பு கொண்டவையாக இருக்கலாம் என்றும் கூறினார்

வரலாறு

  • பிரிடிரிக் மியெசர் என்பவரால் 1869 இல், கருவமிலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் வெண்குருதியணுக்களின் கருவில் இருந்து பொஸ்பேற்று மூலக்கூறுகளை அதிகளவில் கொண்ட, சில வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தார். அதனை அவர் நியூக்கிளின் (Nuclein) எனப் பெயரிட்டார். அதுவே தற்போது நியூகிளிக்கமிலங்கள் அல்லது கருவமிலங்கள் என அறியப்படுகின்றன.[3]
  • 1889 ஆம் ஆண்டில் ரிச்சார்ட் அல்ட்மன் (Richard Altmann) என்பவர் நியூக்கிளின்கள் அமிலத் தன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்த பின்னர் அவை நியூக்கிளிக்கமிலங்கள் அதாவது கருவமிலங்கள் என அழைக்கப்பட்டன.[4]
  • வில்லியம் அஸ்ற்பரி (William Astbury) என்பவரும் பெல் (Bell) என்பவரும் இணைந்து டி.என்.ஏ க்குரிய எக்ஸ் கதிர் படமொன்றை வெளியிட்டனர்.[5]
  • 1953 இல் வாட்சன், மற்றும் கிரிக் என்ற இருவரும் இணைந்து கருவமிலங்களின் மூலக்கூற்றுக் கட்டமைப்பை வெளியிட்டனர்.[6]

புதிய உயிரியல் மற்றும் மருத்துவம்|மருத்துவ ஆய்வுகளில் இந்தக் கருவமிலங்கள் மிக முக்கிய பங்காற்றுவதுடன், மரபணுத்தொகை, தடய அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு போன்றவற்றிற்கும் ஒரு அடிப்படையை வழங்குகின்றது.[7][8][9]

References

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.