From Wikipedia, the free encyclopedia
கனகோனா (Canacona) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும், நகராட்சி மன்றமுமாகும் . கனகோனா வட்டத்தில் பட்னெம், சௌடி, போயுங்கினிம், லோலியம்-போலம், அகோண்டா ,கௌம்டோங்ரே ஆகிய ஊர்கள் அடங்கும். இந்த வட்டத்தின் தலைமையகமான சவுதி நன்கு வளர்ந்த நகரமாக இருக்கிறது . புகழ்பெற்ற பாலோலெம் கடற்கரை இங்கு அமைந்துள்ளது.
கனகோனா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 15.02°N 74.02°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா (மாநிலம்) |
மாவட்டம் | தெற்கு கோவா மாவட்டம் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | இதோர் பெர்னாண்டசு |
• தலைவர் | நித்து சமீர் தேசாய் |
ஏற்றம் | 10 m (30 ft) |
மக்கள்தொகை (2011)மொழிகள் | |
• மொத்தம் | 12,434 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | GA 10 |
இணையதளம் | goa |
கனகோனா 15.02 ° வடக்கிலும், 74.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது . [1] சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. கனகோனா கோவாவின் தெற்கே வட்டமாகும்.
கனகோனாவின் வரலாற்று பெயர் "கன்வபுரம்" என்பதாகும்.
இங்குள்ள பிரபோதினி மண்டலத்தின் மல்லிகார்ஜூன கலை மற்றும் வணிகக் கல்லூரி கோவா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இப்பகுதியின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த வட்டத்தின் முதன்மை கல்வி நிறுவனம் ஆகும். கனகோனாவில் இரண்டு உயர்நிலைகள் உள்ளன. [2]
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கனகோனா நகரில் 12,434 மக்கள் தொகை இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 52%, பெண்கள் 48%. கனகோனாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 89.31% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 93.09% மற்றும் பெண் கல்வியறிவு 85.47%. மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்கள். கொங்கணியைத் தவிர, மராத்தி மொழியும் இங்கு ஒரு சிலரால் பேசப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.